Tiruvallur bday celeb | பட்டாக்கத்தியில் கொண்டாட்டம்
திருவள்ளூர் அருகே பட்டாகத்தியில் கேக் வெட்டி கையேரி பட்டாசுகளை கொளுத்தி எரிந்து பிறந்தநாள் கொண்டாடிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவள்ளுர் அடுத்தகொப்பூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ஒளி என்ற இளைஞருக்கு கடந்த 1 ம் தேதி பிறந்தநாள் அன்றைய தினம் அவரது சக நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த அருள் என்ற அருண்குமார், கனிஷ்கர், மேலும் 17 வயதுடைய இரு நண்பர்கள் என 5 பேர் ஒன்றாக இணைந்து தமிழ் ஒளி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார்கள். அப்போது பட்டாக்கத்தியில் பிறந்தநாள் கேக்
வெட்டியும்,கையறி பட்டாசுகளை கொளுத்தி வீட்டில் காம்பவுண்ட் சுவர்கள் மீது எறிவது போன்ற படக் காட்சிகளுடன் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் வலைதள பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.
இந்த வீடியோ பெரும் வைரலானதை அடுத்து இது தொடர்பாக மணவாள நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மேலே குறிப்பிடப்பட்டுள்ள 5 நபர்களையும் காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிள் 2 பேர் 17 வயது உடையவர்கள் என்பதால் கடுமையாக எச்சரித்து காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.
மற்ற 3 பேரை கைது செய்ததுடன் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
