selvaperundhagai byte | செல்வப்பெருந்தகை பேட்டி
திமுக எங்களுக்கு கெடு விதிக்கவில்லை. பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை. மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தோம் என செல்வப்பெருந்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், எங்கள் கூட்டணி வலுவாக இருக்கிறது. தொகுதிப் பங்கீடு பேச்சு தொடர்ந்து நடந்து வருகிறது, முடிந்த பிறகு உங்களிடம் அறிவிப்போம்” என்று தெரிவித்தார்.
இதனிடையே, திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், “அவர்கள் (காங்கிரஸ்) கேட்பது வேறு, நாம் (திமுக) சொல்வது வேறு. திமுக – காங்கிரஸ் கூட்டணி விவகாரத்தை சுமுகமாக முடிக்கவே எங்கள் தலைவர் (முதல்வர் ஸ்டாலின்) விரும்புவார். காங்கிரஸார் இப்போது பேச்சுவார்த்தைக்கு வந்திருக்கிறார்கள் என்றாலே பழைய நிலைப்பாட்டில் இருந்து மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் பொருள். இன்று மாலைக்குள் நல்ல செய்தி வரும்” என்றார்.
Total Page Visits: 296 - Today Page Visits: 1
