71st national film award
71வது தேசிய திரைப்பட விருதுகள்..! 3 விருதை தட்டிய தமிழ்ப்படம்
கடந்த 2023 ஆம் ஆண்டிற்கான 71 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
இந்நிலையில் இன்று (செப்டம்பர் 23) டெல்லி விக்யான் பவனில், 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், இந்திய குடியரசு தலைவர் திரெளபதி முர்மு கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
இந்த விழாவில் சிறந்த ஒலிப்பதிவிற்காக அனிமல், சிறந்த தெலுங்கு படமாக பாலையாவின் பகவந்த் கேசரி, சிறந்த தமிழ் படத்திற்காக பார்க்கிங் ஆகிய படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த நடிகருக்கான தேசிய விருது இந்த முறை 12th ஃபெயில் படத்திற்காக விக்ராந்த் மாஸ்ஸே மற்றும் ஜவான் திரைப்படத்திற்காக நடிகர் ஷாருக் கான் ஆகிய இருவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது
வாத்தி திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தேசிய விருது பெற்றார்.
இதில் தமிழில் சிறந்த படமாக தேர்வான பார்க்கிங் படத்துக்கு விருது அளிக்கப்பட்டது.

சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது. மேலும் அந்த படத்தில் நடித்த எம்.எஸ்.பாஸ்கர் சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்றார். இவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.
