உண்மையின் உறைவிடம்…

admk accuses tvkvijay | விஜயை சாடிய அதிமுக

பல ஆண்டுகளாகத் தனது திரைப்படங்களின் டிக்கெட்டுகளைச் சட்டத்திற்குப் புறம்பாக ‘பிளாக்’கில் விற்று கோடிக்கணக்கில் சம்பாதித்த விஜய்தான் ஆகப்பெரும் ஊழல்வாதி என்று குற்றம் சாட்டியுள்ளது.

அதிமுக ஐடி விங் பவெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பனையூர் பண்ணையார் அவர்களே, ஊழல் என்பது சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கும் செயல். அப்படிப் பார்த்தால், சட்டத்திற்கு விரோதமாக, தொடர்ந்து ப்ளாக்கில் டிக்கெட் விற்று அதன் மூலம் பல கோடிகள் கண்ட நடிகர் விஜய் ஆகிய நீங்கள் தான் ஆகப்பெரும் ஊழல்வாதி. அரசியலில் நல்லவர்களாக இருக்கலாம் , வல்லவர்களாக இருக்கலாம் ஆனால் ஒன்றுமே தெரியாத-புரியாத , தனது Fan’sஐ கூட ஏமாற்றும் , இன்னும் டைரக்டர் நடிகரவாகவே இருக்கும் தவெக தலைவர் போன்றவராக மட்டும் இருந்துவிட கூடாது ….!
நீங்கள் எங்கள் கழகம் குறித்து, மனனம் செய்து ஒப்புவிக்கும் ஒட்டுமொத்தக் கருத்துருவும் ஒன்னா நம்பர் குப்பையே..!அறிவாலய குப்பையோடு, பனையூர் குப்பையையும் கூட்டியெறிந்திடுவோமாக” என்று பதிவிட்டுள்ளார்.

Total Page Visits: 109 - Today Page Visits: 1

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!