உண்மையின் உறைவிடம்…

sikkim today earthquake | அடுத்தடுத்து நிலநடுக்கம்

சிக்கிமில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சிக்கிமில் கியால்ஷிங் மற்றும் மங்கன் பகுதிகளில் இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. முதலில், சிக்கிமின் கியால்ஷிங் பகுதியில் இன்று காலை 11.34 மணியளவில் ரிக்டர் 4.6 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, சிக்கிமின் மங்கன் பகுதியில் மதியம் 12.17 மணியளவில் ரிக்டர் 3.5 அளவில் இரண்டாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, சிக்கிமின் கியால்ஷிங் பகுதியில் மதியம் 12.39 மணியளவில் ரிக்டர் 3.9 அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஒரே நாளில் 4வது முறையாக சிக்கிமின் மங்கன் பகுதியில் மதியம் 1.12 மணியளவில் ரிக்டர் 3.4 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Total Page Visits: 93 - Today Page Visits: 1

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!