Sengottaiyan press meet | செங்கோட்டையன் பேட்டி
அதிமுகவில் ஜெயக்குமாருக்கு சீட் கிடைக்காது என்று தவெக நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், தவெகவால் காங்கிரஸ் கட்சிக்கு பயன் கிடைத்துள்ளது. என்டிஏ கூட்டணியாக இருந்தாலும், திமுக கூட்டணியாக இருந்தாலும் சரி.. எங்களை காட்டி கூடுதல் சீட்டு பெறும் என்ற நிலை உள்ளது. எங்களை காட்டி கூடுதல் சீட்டுகளை காங்கிரஸ் பெற்றுள்ளது. தவெக தனித்துப் போட்டியிடுமா என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.
அதேபோல் ஜெயக்குமாருக்கு அதிமுகவில் சீட் கிடைக்கப் போவதில்லை.. அவர் வேண்டுமானால் தவெகவுக்கு தாராளமாக வரலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் விஜய்யுடன் சசிகலா தரப்பு கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்ல்கான பணிகள் மதுரையில் நடந்து வருவதாகவும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர் என தெரிவித்தார்.
..
Total Page Visits: 103 - Today Page Visits: 3
