Karur stampede issue | தவெக விஜய் ஆஜர்
கரூர் விவகாரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் இன்று சிபிஐ அதிகாரிகள் சுமார் 6 மணி நேரம் மேற்கொண்ட விசாரணை நிறைவடைந்தது.
இன்று விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் 6 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். குறிப்பாக கரூர் பிரச்சாரத்திற்கு தாமதமாக வந்தது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தவெக நிர்வாகிகள் உள்ளிட்டோர் வழங்கிய பதில்கள் ஒன்றுக்கு ஒன்று முரணாக இருந்தது. எனவே அதனை மையப்படுத்தி இன்று விஜய்யிடம் விசாரணை நடத்தியதாக தகவல்கள் சொல்லப்படுகிறது.விஜய்யிடம் இன்றும், நாளையும் சிபிஐ விசாரணை நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், அவரிடம் இன்றோடு விசாரணை நிறைவடைந்ததாகவும், அவர் சென்னை புறப்பட அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
Total Page Visits: 112 - Today Page Visits: 1
