Thirumavalavan speech | திருமாவளவன் காட்டம்
திமுகவோடு பேரம் பேசும் கட்சி அல்ல நாங்கள் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், ஆட்சியில் பங்கு என்பதை முதன்முதலில் முன்வைத்தது விசிக தான். ஆனால் தமிழ்நாட்டில் அதற்கான காலம் கனியவில்லை. இருந்தாலும் அதிகாரப்பங்கு என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என கூறினார் திருமாவளவன். தொடர்ந்து அவர் பேசுகையில், எங்களுடைய கருத்துக்களை உரிமையோடு பகிர்ந்துள்ளோம்.
நாங்கள் பேரம் பேசவில்லை. திமுக தலைமையிலான கூட்டணியை வெற்றி பெற வைக்க வேண்டும். தமிழ்நாட்டில் மோடியின் வித்தை பழிக்காது. தமிழ்நாடு வேறு. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் வேறு. இதனை 2026 தேர்தல் முடிவு மீண்டும் அவர்களுக்கு உணர்த்தும். இவ்வாறு விசிக தலைவர் திருமாவளவன் எம்பி கூறியுள்ளார்.
Total Page Visits: 137 - Today Page Visits: 1
