Minister sekarbabu assured | அமைச்சர் சேகர்பாபு உறுதி
தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என அமைச்சர் சேகர்பாபு வாக்குறுதி அளித்தார்.
சென்னை அம்பத்தூரில் 57 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மை பணியாளர்களை இன்று அமைச்சர் சேகர்பாபு நேரில் சந்தித்து உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். அதுமட்டுமின்றி தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் எனவும் அவர் வாக்குறுதி அளித்தார்.
இந்த நிகழ்வின் போது உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் பாரதி மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் உடன் இருந்தனர். அமைச்சர் சேகர்பாபு வாக்குறுதி அளித்ததால் மகிழ்ச்சி அடைந்த தூய்மை பணியாளர்கள் ஆனந்த கண்ணீர் வடித்தும், குத்தாட்டம் போட்டும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
