உண்மையின் உறைவிடம்…

Tamilisai Strongly Criticizes | திருமாவளவன் துணை முதல்வர்-ஆ?

திருமாவளவனுக்கு 6 மாதமாவது துணை முதல்-அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமூக நீதியை உண்மையாகவே ஸ்டாலின் பின்பற்றுகிறார் என்றால், இந்த ஆட்சியில் மீதமிருக்கும் 6 மாத காலத்திற்காவது துணை முதல்-அமைச்சர் பதவியை திருமாவளவனுக்கு கொடுக்க வேண்டும். ஜிஎஸ்டியால் பொருட்களின் விலை குறையுதே.. மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்களே என சந்தோஷப்படாமல், அய்யய்யோ விலை குறைஞ்சிடுச்சு.. மக்கள் இனிமேல் பாஜகவிற்கோ அதிமுகவிற்கோ ஓட்டு போட்ருவாங்களோ என இந்தியா கூட்டணியினர் கவலையில் உள்ளனர்.

எப்பொழுதும் பாஜக, அதிமுக என்ன செய்கிறது? டெல்லிக்கு செல்கிறார்களா? எந்தக் காரில் செல்கிறார்கள்? வேறு காரில் போகிறார்களா? ஒரே காரில் போகிறார்களா? என்பதில்தான் கவனமாக இருக்கிறார்கள் திமுகவினர். மக்கள் பிரச்னையை கவனிப்பதில்லை சம்பளம் கொடுக்க காசு இல்லை. ஆனால், பேனா சிலை வைப்பதற்கும், வெளிநாட்டுக்கு செல்வதற்கும் காசு இருக்கிறது. கடுமையான எனது கண்டனங்கள்.

Total Page Visits: 545 - Today Page Visits: 2

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!