உண்மையின் உறைவிடம்…

MA.Su speaks about vijay

எழுதி கொடுத்து பேசும் விஜய் – மா.சு நறுக்

தவெக தலைவர் விஜயின் பேச்சு யாரோ எழுதி கொடுத்து படிப்பது போல் உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஜமீன் தண்டத்தில் ” நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் ” முகாமினை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

நாகை மருத்துவமனையில் பிரசவத்திற்கு மருத்துவர்கள் இல்லை என்று சொல்வது யாரோ எழுதிக் கொடுத்துப் படிப்பது போல் உள்ளது என்று கூறினார். மேலும் அண்ணாமலை பல்கலைக்கழகம் மருத்துவமனையைப் பூட்டுப் போடுவோம் என அன்புமணி பேசியது அறியாமையில் பேசுகிறார்.அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவமனையில் புது மருத்துவமனைக்குத் தேவையான அனைத்து வசதிகளும் மருத்துவங்களும் கொள்முதல் செய்யப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. ஒரு மருத்துவராக இருந்து கொண்டு மருத்துவமனை திறக்க வேண்டுமே தவிரப் பூட்டுப் போடுவோம் என்று சொல்வது அறியாமையின் உச்சம் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.

Total Page Visits: 632 - Today Page Visits: 1

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!