உண்மையின் உறைவிடம்…

Northchennai awareness rally | பள்ளி விழிப்புணர்வு பேரணி

வடசென்னையில் போதை பொருட்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் பூக்கடை பகுதியில் பள்ளி விழிப்புணர்வு பேரணி நடத்தினர். மேலும் பூக்கடை மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் விழிப்புணர்வு கைப்பந்து போட்டி நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

சென்னையில் நாளுக்கு நாள் போதை பொருள் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையிலும், பள்ளி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி விடக்கூடாது என்பதற்காகவும், பள்ளி மாணவர்கள் மற்றும் பள்ளிக்கு செல்லாமல் வேலைக்கு செல்லும் சிறுவர்கள் அதிகம் இருக்கும் இடத்தில் போதை பொருள் பயன்பாடு குறித்தும், அதனால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் காவல் துறைக்கு காவல் ஆணையாளர் அருண் காவல் துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார். காவல் ஆணையாளர் உத்தரவை தொடர்ந்து சென்னை முழுவதும் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பூக்கடை பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பூக்கடை மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் சார்பில் பூக்கடை பகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்கள் வால்டாக்ஸ் சாலை யானைகவுனி காவல் நிலையத்தில் இருந்து கண்ணப்பர் திடல் வரை பேரணியாக சென்று போதை பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பின்னர் கண்ணப்பர் திடல் விளையாட்டு மைதானத்தில் விழிப்புணர்வு தொடர்பாக பள்ளி மாணவர்களுக்கான கைப்பந்து போட்டியும் நடத்தப்பட்டது. தமிழ்நாடு மதுவிலக்கு மண்டல சூப்பிரண்டன்ட் கோபி மேற்பார்வையில் மதுவிலக்கு அமல்பிரிவி வடக்கு மண்டல உதவி ஆணையாளர் சம்பத் துவக்கி வைத்தார். இதில் பூக்கடை ஆய்வாளர் ஷஜிபா உதவி ஆய்வாளர் பொன்பாண்டியன் ஆகியோர் உட்பட பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் போட்டியில் பங்கேற்ற 6 அணிகளில் வெற்றி பெற்ற 4 அணிகளுக்கு வெற்றி கோப்பைகளும், போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கு பதக்கங்களும் வழங்கப்பட்டன.

Total Page Visits: 510 - Today Page Visits: 1

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!