உண்மையின் உறைவிடம்…

Tamilnadu hindu religious | பாஜகவை மிஞ்சும் அறநிலையத்துறை

கடந்த 2014 முதல் இந்தியாவை ஆண்டு வரும் பாஜக, ஒரு மதவாத கட்சி என்றே பார்க்கப்படுகிறது. பாஜகவின் செயல்பாடு இந்துக்களுக்கு ஆதரவாகவும், மற்ற மதத்தினருக்கு எதிராக இருப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது. மற்ற மாநிலங்களில் பாஜகவின் அரசியல் செயல்பாடு ஏற்று கொள்ளப்பட்டாலும் திராவிட கட்சிகள் ஆளும் தமிழகத்தில் பாஜகவின் இந்துத்துவா என்ற திட்டம் இதுவரை ஏற்று கொள்ளப்படவில்லை. இந்துக்களுக்காக மட்டுமே பாஜக செயல்பட்டு வருகிறது என்ற நிலை இருந்தாலும் தமிழகத்தில் பாஜகவை மிஞ்சும் அளவிற்கு தமிழ்நாடு இந்து அறநிலையதுறையின் செயல்பாடு பிரமிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதன்மூலம், இந்துத்துவத்துக்கான தேவையை நீர்த்துப் போகச் செய்து, பாஜகவின் செயல்திட்டங்களை வீழ்த்தி வருகிறது இந்து சமய அறநிலையத்துறை. இதற்கு முன்பு தமிழக ஆட்சி களத்தில் இந்து அறநிலைய துறை என்பது ஒரு தூங்கும் துறையாகவே இருந்து வந்தது. ஆனால் 2021 திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல்வர் ஸ்டாலினின் நம்பிக்கை நாயகனான பி.கே.சேகர்பாபுவிடம் ஒப்படைக்கப்பட்டது இந்து அறநிலையதுறை. வடசென்னையின் நாயகனாக சென்னை முழுவதும் அறியப்பட்ட சேகர்பாபு இந்து அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றதில் தமிழகம் முழுவதும் பம்பரமாக சுழன்று தன்னுடைய வேகமான நடவடிக்கையால் தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்தினார்.இது ஒரு புறம் இருந்தாலும் இந்து அறநிலைய துறையும் சாதாரண துறையில்லை; இந்த துறையில் இருந்தும் அனைவரும் அனைத்து திட்டங்களை செயல்படுத்த முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மற்ற துறைகளில் இருந்து நிதியை எடுத்து இந்து அறநிலைய துறை நடத்தப்பட்ட நிலை மாறி இந்து அறநிலைய துறை நிதியை மற்ற துறைகளின் பணிகளுக்கு பயன்படுத்தும் வகையில் இந்து அறநிலைய துறையின் அமைச்சராக சேகர்பாபு செயல்பட்டு வருகிறார்.இந்து அறநிலைய துறையால் அனைத்தும் செய்யப்படும் என்பதை நிரூபிக்கும் வகையில் கொளத்தூர் தொகுதியில் இந்து அறநிலைய துறை சார்பில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியையும் கட்டி வருகிறார். இந்துத்துவ கட்சியான பாஜக, தமிழகத்திற்கு என்ன செய்தது என தமிழக மக்கள் சிந்திப்பார்களோ இல்லையோ, தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலைய துறை என்ன செய்தது என்பதை மக்கள் நினைவுகூரும் வகையில் செயல்பட்டு வருகிறார் அமைச்சர் சேகர்பாபு.

Total Page Visits: 352 - Today Page Visits: 1

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!