உண்மையின் உறைவிடம்…

Chennai Fake beggers | பீதியில் பொதுமக்கள்

தமிழகத்தில், குறிப்பாக தலைநகர் சென்னையில், யாசகம் கேட்பவர்கள் (பிச்சைக்காரர்கள்) — குடும்பத்தால் ஒதுக்கப்பட்டவர்கள், வறுமையின் பிடியில் சிக்கியவர்கள் உள்ளிட்டோருக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில், தமிழக அரசு பல்வேறு அரசு காப்பகங்களை கட்டி இருக்கிறது. யாசகர்கள் இல்லாத நகரமாக சென்னையை மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருந்தபோதிலும், குடும்பத்தால் கைவிடப்பட்டு தனியாக வாழும் முதியவர்கள் மற்றும் ஆதரவில்லாதவர்கள், யாசகம் கேட்டு தங்களது பசியை போக்கி வருகின்றனர்.ஆனால் தற்போது சென்னையில் யாசகம் கேட்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வடமாநிலப் பெண்கள் கை குழந்தைகளுடன் யாசகம் கேட்பது அதிகரித்துள்ளது.கடந்த சில வாரங்களுக்கு முன் தாம்பரம் பகுதியில், உடல் ஊனமுற்றவர்களாக நடித்து, ஒரு பெண்ணும் ஆணும் யாசகம் எடுத்துவந்தனர். அவர்களுக்கு உதவ முன்வந்த சமூக ஆர்வலர், அவர்களை அரசு காப்பகத்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தபோது, ஊனமுற்றவர்களாக நடித்த இருவரும் திடீரென எழுந்து ஓடியுள்ளனர். இதில் அந்த ஆண் தப்பி ஓட, பெண் மட்டும் சிக்கியுள்ளார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னையின் பாரிமுனை, அண்ணா சாலை, திருவான்மியூர், சோழிங்கநல்லூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் பிற மாநில யாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.சென்னை முழுவதும் கூலி வேலை முதல் பல்வேறு தொழில்களில் வடமாநிலத்தவர்கள் பணி புரிந்து வருகிறார்கள். அதேபோல், யாசகம் கேட்பவர்களிலும் அவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.இதற்கு இணையாக, சென்னையில் நடைபெறும் பல திருட்டு சம்பவங்களில் வடமாநிலத்தவர்கள் தொடர்புடையதாக தெரிய வருகிறது. உதாரணமாக, சென்னை புறநகர் கவரப்பேட்டையில், ஒரு வடமாநில இளைஞர் போதையில் ஒரு சிறுமியை கடத்தி, பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் உள்ளிட்ட பல குற்றச் செயல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குறைந்த ஊதியம் மற்றும் கடுமையான உடலுழைப்பை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதனால், வடமாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. இதனால், அவர்கள் தமிழகம் முழுவதும் சென்று தங்களது வாழ்க்கையை முன்னேற்றிக் கொண்டிருக்கின்றனர்.ஆனால், இவர்களில் சிலர் யாசகம் கேட்டு வாழ்க்கை நடத்துவதை கூடத் தவிர்க்கவில்லை.இப்படி யாசகம் கேட்பவர்களை சென்னை மாநகர காவல் துறை கண்காணிக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது. சென்னையில் எங்கு பார்த்தாலும் பெண்கள், கை குழந்தையுடனும், சிலர் தனியாகவும் யாசகம் கேட்கிறார்கள்.இவர்கள் உண்மையில் வறுமையால் பாதிக்கப்பட்டவர்களா? இல்லையெனில், ஆட்கள் இல்லாத பகுதிகளை நோட்டமிட்டு திருட்டு சம்பவங்களை நிகழ்த்தும் குழுக்களா? என்பதை ஆராய வேண்டும். தாம்பரத்தில் நடந்த சம்பவம், இந்த சந்தேகங்களை மேலும் உறுதிப்படுத்துகிறது.இதனால், ‘இயலாதோர்க்கு செய்யும் தானம் உண்மையில் அவர்களுக்குதான் சென்று கொண்டு இருக்கிறதா? அல்லது போலி யாசகர்களின் பேரில் கொள்ளைக் கூட்டங்களுக்கு கிடைக்கிறதா?’ என்ற குழப்பத்தில் பொதுமக்கள் சிக்கியுள்ளனர். மேலும், யாசகம் கேட்பவர்களைப் பார்க்கும்போது, ‘தங்களின் வீடுகளுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ?’ என்ற பயமும் மக்கள் மனதில் எழுகிறது.சென்னை மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் இவ்வாறான போலி யாசகர்களை காவல்துறையினர் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Total Page Visits: 139 - Today Page Visits: 1

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!