TTV Dinakaran’s Plan | தேசிய ஜனநயாக கூட்டணிக்கு ஆதரவா? இல்லையா?
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுசெயலாளரான டிடிவி தினகரன் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அரசியல் பணிகளை மேற்கொண்டு வந்தார். தமிழகத்தில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த அவர் அதே கூட்டணியில் இருக்கும் எடப்பாடி கே பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக இருந்தாலும் திமுகவை வீழ்த்துவதற்காக பணியாற்றுவோம் என பாஜகவிடம் உறுதி கொடுத்து பணிகளை மேற்கொண்டு வந்தார். ஆனால் அதிமுகவில் இருந்து 5 ஆவது அணியாக செங்கோட்டையன் பிரிந்த பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியில் இல்லை, எடப்பாடி கே பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக இருந்தால் நாங்கள் கூட்டணியில் இருக்க மாட்டோம் என்ற நெருக்கடியை பாஜகவிற்கு கொடுத்து தனது தேர்தல் வியூகத்தை துவக்கியுள்ளார். பெரியகுளம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், சென்னை ஆர்கே நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த வந்த டிடிவி தினகரன் ஆர்கே நகர் சட்டமன்ற உறுப்பினராகவும், முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா இறந்தபிறகு அப்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுகவில் இருந்த அனைத்து அமைச்சர்களையும் களமிறக்கி தேர்தல் வியூகம் வகுத்து ஆர்கே நகர் தேர்தலில் வெற்றி பெற்றார். தன் வெற்றி மட்டுமல்லாமல் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வெற்றிக்கு பின்புலனாக பல்வேறு தேர்தல் வியூகங்களை வெற்றிக்கு காரணமான இருந்த டிடிவி தினகரன் தற்போது எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆசைகளை நிறைவேற்றும் விதமாக திமுகவை ஆட்சியில் இருந்து வெளியேற்ற பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். அதிமுக மற்றும் இரட்டை இலை இவை இரண்டின் பலத்துடன் பாஜக கூட்டணியில் இருந்த டிடிவி தினகரன் தற்போது அந்த கூட்டணியில் இருக்கிறாரா? அல்லது கூட்டணியில் இருக்க நிபந்தனைகள் விதித்துள்ளாரா? என்பது தமிழக அரசியலில் அதீத கவனத்தை பெற்றுள்ளது. தேர்தல் வியூகம் வகுத்து பல வெற்றி கண்ட டிடிவி தினகரன் திமுகவை வீழ்த்த தவெக விஜயுடன் கூட்டணி அமைக்கும் வியூகத்தை திட்டமிட்டுள்ளாரா? அல்லது அதிமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் பயணித்து அதிமுக பொதுசெயலாளரான எடப்பாடி கே பழனிச்சாமி வெற்றிக்கு பிரச்சாரம் செய்வாரா? என்பது அவருடைய அடுத்தடுத்த நடவடிக்கைகளில் தெரியவரும்.
