உண்மையின் உறைவிடம்…

Cyclon ditwa status | டிட்வா புயலின் நிலை

டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு இரவு 10 மணி வரை ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும், கடலூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் தமிழகத்தில் சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.

சென்னையில் இருந்து 150 கிமீ தூரத்தில் மையம் கொண்டிருந்த டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழ்ந்தது. இருந்த போதிலும், இன்று இரவு 10 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Total Page Visits: 64 - Today Page Visits: 2

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!