TVK Vijay authority | தவெக கூட்டத்தில் தீர்மானங்கள்
விஜய்யின் தவெக கூட்டத்தில் 4 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில், இன்று (11ஆம் தேதி) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தவெக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், அண்மையில் தவெகவில் இணைந்த செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் மற்றும் நிர்வாகிகள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில், விஜய்யை முதலமைச்சராக ஏற்றுக் கொண்டு அவரின் தலைமை விரும்பி வருவோரை கூட்டணிக்கு அரவணைப்போம். கூட்டணி குறித்து அனைத்து இறுதி முடிவுகளையும் எடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கப்படுகிறது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
திமுக ஆட்சியை அகற்றிட தவெக தலைவர் விஜய்யை முதலமைச்சராக ஏற்றுக் கொண்டு, கூட்டணிக்கு வருவோரை அரவணைப்போம். கூட்டணி குறித்த அனைத்து இறுதி முடிவுகளையும் எடுக்க, தலைவருக்கே முழு அதிகாரம் வழங்கி தீர்மானம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை சிறப்பு குழு அமைக்கப்படுகிறது. இதில் கட்சியின் தலைவர் விஜய்யே முடிவெடுக்க தீர்மானம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், தேர்தல் வாக்குறுதிகள் உருவாக்கும் சிறப்பு குழு அமைக்கப்படுகிறது. இதில் கட்சியின் தலைவர் விஜய்யே முடிவெடுக்க தீர்மானம். வலிமையான பரப்புரையை முன்னெடுக்க தீர்மானம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
