seeman condemns thirumavalavan | திருமாவை சாடிய சீமான்
என்னையும், விஜயையும் பா.ஜ.க. பெற்றெடுத்தபோது அவர்தான் பிரசவம் பார்த்தார் என திருமாவளவனுக்கு சீமான் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை திருவேற்காட்டில் நாம் தமிழர் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். இதில் பேசிய சீமான்,
என்னையும், தம்பி விஜய்யையும் பற்றி ஆர்.எஸ்.எஸ். பெற்றெடுத்த பிள்ளைகள் என எனது அண்ணன் திருமாவளவன் கூறி இருக்கிறார். பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.சும் எங்களை பெற்றெடுத்த போது அவர்தான் அருகில் இருந்து பிரசவம் பார்த்தார்.
மேலும் காலம் காலமாக என்னை போலி தமிழ் தேசியவாதி என்றும் அவர் கூறி வருகிறார். அண்ணன்தானே பேசுகிறார். அதனை விடுங்கள் என்றார்.
Total Page Visits: 135 - Today Page Visits: 1
