உண்மையின் உறைவிடம்…

Hockey world cup | ஹாக்கி உலகக் கோப்பை

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருவள்ளூர் மாவட்டம் ஹாக்கி உலகக் கோப்பை காட்சிப்படுத்துதல் மற்றும் வழிய அனுப்பி வைத்த விழா திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

முதல் முறையாக நமது தமிழ்நாட்டில் 14 வது எஃப் ஐ எச் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகள் ஆண்கள் வருகின்ற 28.11.2025 முதல் தொடங்கி 10.12.2025 வரை எஸ் டி ஏ டி எம் ஆர் கே ஆக்கி விளையாட்டு அரங்கம் சென்னையிலும் மற்றும் எஸ் சி ஏ டி எம் ஜி ஆர் மாவட்ட விளையாட்டு அரங்கம் மதுரையிலும் நடைபெற உள்ளன மேலும் நிப்போட்டியில் மொத்தம் 24 நாடுகள் கலந்து கொள்ள தலா 12 அணிகள் விதம் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற இருக்கின்றன

இந்திய ஆக்கிய அணி கடந்த 2001 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் ஜூனியர் உலகக்கோப்பை போட்டியில் வெற்றி பெற்று நமது இந்திய தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்

இதன் தொடர்ச்சியாக ஆக்கி உலகக் கோப்பை பற்றி பொதுமக்கள் விளையாட்டு வீராங்கனைகளுக்கு விழிப்புணர்வு மற்றும் காட்சிப்படுத்தி வழி அனுப்புதல் விதமாக திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் திருமண மண்டபத்தில் ஜூனியர் ஆக்கி உலகக் கோப்பை சிறப்பு காட்சியாக வரவேற்கப்பட்டது அதனை முன்னிட்டு கோபியை வரவேற்று சிறப்பான முறையில் வழி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் மாவட்ட மாநில தேசிய அலுவலக ஹாக்கி வீரர் வீராங்கனைகள் அனைவரும் ஆக்கி உலகக் கோப்பை வரவேற்று வழி அனுப்பி நிகழ்வில் பங்கு பெற்றனர். மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லும் இந்த டிராபிக் டூர் உலகக்கோப்பை ஹாக்கி ரசிகர் இடையே மிகுந்த எதிர்பார்ப்பு உருவாக்குவதற்கு மற்றும் ஹாக்கி விளையாட்டு குறித்து முன்னேற்ற சூழலை உருவாக்குவது நோக்கமாக கொண்டுள்ளது. திருவள்ளூரில் வரவேற்கப்பட்ட இந்த ஹாக்கி உலக கோப்பை மிகுந்த வரவேற்பை மாணவ மாணவிகள் கொடுத்தனர். உற்சாகமுடன் கோப்பையுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். பள்ளி கல்வித்துறை சார்பாக வரவேற்பு கொடுக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில்

பள்ளிக் கல்வித் துறை சார்பாக ஆசிரியர்கள் திருவள்ளூர் மாவட்ட பள்ளி கல்வி அலுவலர் கற்பகம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் வி சேது ராஜன் திரளான ஹாக்கி விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் மற்றும் உடற்பயிற்சியாளர்கள் ஹாக்கி சங்கத்தின் மாவட்ட தலைவர் செயலாளராக கலந்து கொண்டனர்

Total Page Visits: 160 - Today Page Visits: 1

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!