PMK Ramadoss cries | கண்கலங்கிய ராமதாஸ்
பொதுக்குழு கூட்டத்தில் பேசிய பா.ம.க நிறுவனர் ராமதாஸ், “இந்த பொதுக்குழு, செயற்குழு 27 தீர்மானங்களை நிறைவேற்றிருக்கிறோம். இந்த நேரத்தில் எதை பேசி எதை விடுவது என்று எனக்குள் ஒரு குழப்பம் இருக்கிறது. ஏனென்றால் எனக்கு இருக்கின்ற ஆதங்கத்தை கொட்டி உங்களிடம் பகிர்ந்து கொள்ள எனக்கு ஒரு மணி நேரம் தேவை. நான் இடையில் இடையில் பேசியிருக்கலாம். ஆனால், நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதை கேட்டுக் கொண்டிருந்தேன். 2026 சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை எப்போது நான் அறிவிப்பேன் என்று நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறீர்கள். நிச்சயமாக வெற்றி கூட்டணியை அறிவிப்பேன்.
. இந்த மக்கள் என்னை எப்போதும் கைவிட்டதில்லை, இனிமேலும் கைவிடமாட்டார்கள். இது போன்று ஒரு தகப்பன் உனக்கு உலகத்தில் யாராவது கிடைத்திருப்பானா? என்னால் இதற்கு மேல் பேச முடியவில்லை. அவருடைய செயல்பாடு. உனக்கு என்ன குறை வைத்தேன். உனக்கு என்னென்ன செய்ய வேண்டுமோ ஒரு தகப்பனாக அதையெல்லாம் செய்தேன். ஆனால் இப்போது நீ என்னை அவ்வளவு கேவலமாக எழுத சொல்கிறாய். இதற்கெல்லாம் காலம் பதில் சொல்லும். சில நேரங்களில் தூக்கம் மாத்திரை போட்ட கூட தூக்கம் வர மாட்டிக்கிறது. ஏனென்றால், இவனுடைய நினைப்பு வந்துவிடுகிறது. ஆனாலும் மக்களை நினைக்கும் போதூ நான் தூங்கி விடுகிறேன்” என்று பேசினார்.
