உண்மையின் உறைவிடம்…

israel-pm-netanyahu | இஸ்ரேல் பிரதமர்

ஈரான் குடிமக்கள் தற்போதைய இஸ்லாமிய ஆட்சியை வீழ்த்தி தங்களை விடுவித்துக் கொள்ள முன்வர வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கோரிக்கை விடுத்துள்ளார்.

எக்ஸ் (X) தளத்தில் நெதன்யாகு வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், “

ஈரானின் தைரியமான மக்களே, இந்த பொன்னான வாய்ப்பை நழுவ விடாதீர்கள். இது தலைமுறைக்கு ஒருமுறை மட்டுமே வரும் வாய்ப்பு. உங்க வாழ்க்கையை கசப்பாக்கிய பயங்கரவாத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர லட்சக்கணக்கில் வீதிக்கு வாருங்கள். வரவிருக்கும் நாட்களில் ஆயிரக்கணக்கான இலக்குகளை நாங்கள் தாக்குவோம். உங்களை விடுவித்துக் கொள்வதற்கான சூழலை இஸ்ரேல் உருவாக்கும்.” மேலும் பெர்சியர்கள், குர்துகள், அசெரிகள் என அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து ஆட்சியைக் கவிழ்க்க இதுவே தருணம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Total Page Visits: 104 - Today Page Visits: 1

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!