Chennai rain update | வெளுத்து வாங்கும் மழை
டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
டிட்வா புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்த போதிலும் டெல்டா, வட மாவட்டங்களில் பரவலாக செவ்வாய்க்கிழமை(டிச. 2) கனமழை தொடருகிறது. புதன்கிழமை(டிச. 3) முதல் மழை படிப்படியாகக் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Total Page Visits: 59 - Today Page Visits: 1
