Cows in Mainroad | விபத்து ஏற்படும் அபாயம்
புட்லூரில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் அதனை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புட்லூர் மேம்பாலம் முதல் அரண்வாயில் வரை புதிய சாலை கடந்த மாதத்தில் போடப்பட்டு திறக்கப்பட்டது மூன்று கோடி ரூபாய் மதிப்பில் போடப்பட்ட இந்த சாலையில் போக்குவரத்து அதிகமான முறையில் வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன புதிய சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் பேராபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது இந்த புதிய சாலையில் தொடர்ந்து இரவு நேரங்களில் மாடுகள் படுத்திருப்பதால் இருசக்கர வாகனம் நான்கு சக்கர வாகனம் மிகவும் சிரமத்திற்கு உள்ளாக கடந்து செல்லக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது சாலையில் விளக்குகள் இல்லாததால் மாடுகள் படுத்திருப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரியவில்லை இதனால் மாடுகள் மீது வாகன ஓட்டிகள் மோதி பேராபத்து ஏற்படுகிறது தினந்தோறும் இரவு நேரத்தில் மாடுகள் நூற்றுக்கு மேற்பட்ட மாடுகள் சாலையில் படுத்திருப்பதாலும் இந்த விபத்து ஏற்படுகிறது மாடுகளின் உரிமையாளர்கள் மாடுகளை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்லவில்லை தொடர்ந்து சாலையிலே படுத்து கொண்டிருப்பதால் வாகன ஓட்டிகளுக்கு வாகனங்களை இயக்க மிகவும் பயமாக இருக்கின்றது சில மாடுகள் முட்டும் நிலையில் காணப்படுகிறது இதுகுறித்து பலமுறை ஊராட்சி செயலரிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை இது குறித்து மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மாட்டு உரிமையாளர்கள் மீது அபராதம் விதித்து மாடுகளை சாலையில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் தொடர்ந்து விபத்துக்களை தவிர்க்க இந்த புதிய சாலையில் மாடுகள் இல்லாதவாறு பஞ்சாயத்து மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களின் கோரிக்கையாக உள்ளது.
