Pakistan incident | பாகிஸ்தான் சம்பவம்
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஷியா சமூகத்தினர் கூடும் மண்டபத்தில் பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது
இஸ்லாமாபாத்தின் ஷேசாத் பகுதியில் உள்ள இமாம்பர்காஹ் என்ற ஷியா சமூகத்தினர் கூடும் மண்டபத்தில் இன்று மக்கள் அதிகம் கூடியிருந்த சமயம் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. சந்தேக நபர் ஒருவர் மண்டபத்தில் வாயில் அருகே தடுத்து நிறுத்தப்பட்டபோது தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச்செய்துள்ளார்.
இதில் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 160 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது.
Total Page Visits: 175 - Today Page Visits: 1
