உண்மையின் உறைவிடம்…

TN Budget 2026 | தமிழக இடைக்கால பட்ஜெட்

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் பிப்.17-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் சபாநாயகர் அப்பாவு கூறியதாவது: தமிழக சட்டப்பேரவை விதி எண் 26/1-ன் கீழ் தமிழக அரசின் சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 17-ம் தேதி காலை 9:30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் கூடுகிறது. அன்றைய தினம் 2026- 27 ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
தொடர்ந்து வரும் 20-ம் தேதி பேரவை விதி 193/1-ன் கீழ் 2026- 27 ஆம் ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
இதே போல் பேரவை விதி 189 /1-ன் கீழ் 2025- 26 ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவின மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
சட்டப்பேரவை விவாதங்களை முழுமையாக நேரலை செய்வது குறித்து சட்டப்பேரவை அலுவல் ஆய்வு குழு முடிவு செய்யும் என அவர் தெரிவித்தார்.

Total Page Visits: 106 - Today Page Visits: 1

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!