Redhills rain rescue | படகு மூலம் மீட்பு
செங்குன்றம் அருகே மழை வெள்ளம் சூழ்ந்ததால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்த மக்களை தீயணைப்பு துறையினர் படகு மூலம் பத்திரமாக மீட்டனர்.
சென்னை செங்குன்றம் அடுத்த நியூ சன் கார்டன் இரண்டாவது பிரதான சாலை பாலவாயில் பகுதியில் வீட்டில் மழை நீர் புகுந்ததால் வெளியில் வர முடியாமல் அவதிக்குவுள்ளாகி இருந்தனர். இதனை அடுத்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்த செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் இருந்த பச்சையப்பன் செல்வராஜ் லட்சுமி மோனிஷ் ஆகிய நான்கு பேரை மீட்டு பத்திரமாக நிவாரண முகாமில் தங்க வைத்தனர்.
அதே போன்று குமரன் நகர் மூன்றாவது பிரதான சாலையில் இருந்த ஐந்து பேரையும் செங்குன்றம் தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டு அருகில் உள்ள முகாமில் தங்க வைத்துள்ளனர்.
Total Page Visits: 88 - Today Page Visits: 1
