உண்மையின் உறைவிடம்…

Gas Cylinder issue | சிலிண்டர் சீக்கிரம் வரும்

10 நாட்களில் வணிக பயன்பாட்டிற்கான LPG சிலிண்டர் பிரச்சினை சரி ஆகும் என அமைச்சர் பூரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மக்களவையில் விளக்கமளித்த பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, “வணிக பயன்பாடு சிலிண்டர் விநியோகம் 10 நாட்களில் சீரடையும். வீட்டு உபயோக எரிவாயு விநியோகத்துக்கு முன்னுரிமை தரப்படுகிறது.

பெட்ரோல் டீசல், மண்ணெண்ணெய், விமான எரிபொருள் இருப்பில் எந்த குறையும் இல்லை.போர் நீண்ட காலம் நீடித்தாலும், இந்தியாவில் இயற்கை எரிவாயு உற்பத்தியும் விநியோக ஏற்பாடுகளும் போதுமான அளவு உள்ளன.

அனைத்து குடும்பங்களுக்கும் LPG கிடைப்பதை உறுதி செய்ய கடந்த 5 நாட்களில் சுத்திகரிப்பு நிலையங்களில் உள்நாட்டு உற்பத்தி 28% அதிகரிக்கப்பட்டுள்ளது. LPG பதிவு செய்வதற்கான கால இடைவெளி 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஒரு மாதத்துக்கு ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் biomass, RDF pellets, மண்ணெண்ணெய், நிலக்கரி போன்ற மாற்று எரிபொருள்களை பயன்படுத்த அனுமதிக்குமாறு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அமைச்சகம், மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆகியவை அறிவுறுத்தப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.

Total Page Visits: 134 - Today Page Visits: 1

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!