Ladakh Statehood protest | லடாக்கில் வெடித்த வன்முறை
மாநில அந்தஸ்து கோரி லடாக்கில் நடைபெற்ற போராட்டத்தில் பாஜக அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. போராட்டம் வன்முறையாக வெடித்ததில் 4 பேர் பலியாகினர்.
லடாக்கிற்கு மாநில அந்தஸ்து மற்றும் சுயாட்சியை வழங்கும் 6வது அட்டவணை அந்தஸ்தும் வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி பிரபல காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக், 35 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில், லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கேட்டு அங்குள்ள இளைஞர்கள் மற்றும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், அங்கு வன்முறை வெடித்தது. ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், போலீசார் வாகனங்களுக்கு தீவைத்தனர். மேலும், லேவில் உள்ள பாஜ அலுவலகத்திற்கும் நெருப்பு வைத்தனர். இதனால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
