avadi 600kg drugs | கிலோ கணக்கில் போதைபொருள்
ஆவடி காவல் ஆணைரயகத்தில் சுமார் 227 வழக்குகளில் கைப்பற்றப்பட்டுள்ள சுமார் 603.775 கிலோ கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டது.
ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கைப்பற்றப்பட்ட கஞ்சாவினை அழிக்க, ஆவடி மாநகர காவல் ஆணையாளர் திரு.கி.சங்கர், இ.கா.ப., அவர்களின் உத்திரவின் படி ஆவடி மாநகர் காவல் கூடுதல் ஆணையாளர் திருமதி K. பவானீஸ்வரி, இ.கா.ப., அவர்கள் தலைமையில் ஆவடி காவல் மாவட்ட காவல் துணை ஆணையாளர் திரு.பெரோஸ்கான் அப்துல்லா, இ.கா.ப., மற்றும் தடய அறிவியல் துணை இயக்குனர் திருமதி.ஷோபியா ஜோசப் ஆகியோர்கள் கொண்ட போதை பொருள் அழிப்பதற்கான குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது.கஞ்சாவினை அழிக்க அரசால் அனுமதிபெற்ற செங்கல்பட்டு மாவட்டம், தென்மேல்பாக்கம் என்ற இடத்தில் உள்ள G.J. Multiclave India Pvt. Limited என்ற நிறுவனத்தில் உள்ள Insulator-ல் இன்று 05.11.2025 ஆம் தேதி ஆவடி காவல் ஆணையாளர் அலுவலக எல்லையில் உள்ள காவல் நிலையங்களில் நீதிமன்றத்தில் அழிப்பதற்கான ஆணை பெறப்பட்ட சுமார் 227 வழக்குகளில் கைப்பற்றப்பட்டுள்ள சுமார் 600 கிலோ கஞ்சா, 3 கிலோ கஞ்சா சாக்லேட், 19000 போதை மாத்திரைகள், 0.238 மெத்தபெட்டமைன் (மொத்தம் சுமார் 603.775 கிலோ) என மொத்தம் ரூ.60,37,750 மதிப்புடைய தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் ஆவடி காவல் கூடுதல் ஆணையாளர் திருமதி K. பவானீஸ்வரி, இ.கா.ப., அவர்கள், ஆவடி காவல் மாவட்ட காவல் துணை ஆணையாளர் திரு.பெரோஸ்கான் அப்துல்லா, இ.கா.ப., ஆவடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் உதவி ஆணையாளர் திரு.பொன்சங்கர், காவல் ஆய்வாளர் திருமதி.சுபாஷினி மற்றும் காவலர்கள் ஆகியோர்கள் முன்னிலையில் அழிக்கப்பட்டது.இதுவரை 2024 ஆம் ஆண்டு 112 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட சுமார் ரூபாய் 40 இலட்சம் மதிப்புள்ள 399 கிலோ கஞ்சா மற்றும் 2025 ஆண்டு 491 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட சுமார் இரண்டு கோடியே முப்பத்து ஒன்பது இலட்சம் மதிப்புள்ள சுமார் 2,382 கிலோ கஞ்சா எரித்து அழிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து போதையில்லா தமிழ்நாடு என்ற கோட்பாட்டை வலியுறுத்தி அரசால் தடைசெய்யப்பட்ட போதை பொருள்கள் சம்மந்தமாக தீவிர சோதனை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
