உண்மையின் உறைவிடம்…

Cooperative bank issue | நகையை மீட்க நடவடிக்கை

ஈரோட்டில் கூட்டுறவு வங்கியில் 60 பவுன் நகை கையாடல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், முனிசிபல் காலனியில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் உறுப்பினர்கள் பலர் தங்களது நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்று உள்ளனர். இந்த நகைகளின் இருப்பு தொடர்பாக வங்கியின் அதிகாரிகள் தணிக்கை செய்தனர். அப்போது 60 பவுன் நகை கையாடல் செய்யப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக வங்கியின் இயக்குனர் ஜெயந்தி ஈரோடு அரசு மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் நகையை கையாடல் செய்ததாக வங்கியின் உதவி மேலாளரான ஈரோடு ரங்கம்பாளையம் இரணியன் வீதியை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், தலைமறைவாக இருந்த ரமேஷ்குமாரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். அவரை பிடிக்க ஈரோடு டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துகுமரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் ஈரோடு மாநகர் பகுதியில் ரமேஷ்குமார் இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று ரமேஷ் குமாரை மடக்கி பிடித்தனர். இதையடுத்து ரகசிய இடத்துக்கு அவர் அழைத்து செல்லப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.விசாரணையில், கூடுதல் நகைகள் கையாடல் செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.
எனவே எவ்வளவு நகை கையாடல் செய்யப்பட்டது? இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கையாடல் செய்யப்பட்ட நகைகளை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Total Page Visits: 486 - Today Page Visits: 1

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!