Trichy prison dead | திருச்சி மத்திய சிறை
திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளி திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டு இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுபின் குமார். இவருக்கு வயது 19. இவர் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு திடீரென வலிப்பு நோய் வந்துள்ளது. தகவலறிந்து உடனடியாக சென்ற சிறை காவலர்கள் சுபினை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து உடற்கூறு ஆய்விற்காக அவருடைய உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மரணம் குறித்து கே.கே.நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Total Page Visits: 857 - Today Page Visits: 2
