உண்மையின் உறைவிடம்…

Today gold rate | தங்கத்தின் விலை உயர்வு

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.4,120 உயர்ந்து ரூ.1,15,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டு வருவது நகைப்பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக இன்று காலை சவரனுக்கு ரூ. 2,800 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,14,000 -க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன்மூலம் ஒரேநாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,120 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலை தற்போது கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.345-க்கும், கிலோவுக்கு ரூ. 5,000 உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.3,45,000-க்கும் விற்பனையாகி வருகிறது.

தங்கம், வெள்ளி விலைகளில் ஏற்பட்டுள்ள புதிய உச்சம் இல்லத்தரசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Total Page Visits: 108 - Today Page Visits: 1

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!