உண்மையின் உறைவிடம்…

ttv dinakaran cant accept | திட்டவட்டமாக தெரிவித்த டிடிவி

எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களுடன் பேசிய டிடிவி தினகரன், “அரசியலில் இருப்பதால் அரசியல் மட்டும்தான் பேச வேண்டும் என்று அவசியமில்லை. நண்பர்கள் என்ற முறையில் அண்ணாமலையுடன் ஒரு மணி நேரம் பேசினேன்.
அண்ணாமலை மாநிலத் தலைவராக இருந்தபோதுதான் எங்களை கூட்டணிக்கு கொண்டு வந்தார். தில்லியில் நாங்கள் யாரையும் சந்திக்கவில்லை. அண்ணாமலை மூலமாகதான் கூட்டணியில் இணைந்தோம். கூட்டணி விட்டு விலகிய பிறகும் அவரிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்.
கூட்டணி விவகாரத்தில் நீங்கள் அவசரப்பட வேண்டாம் என்று அவர் தொடர்ந்து கூறி வந்தார். முடிவை பரிசீலனை செய்யக் கோரினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்பது தொடரும்பட்சத்தில் அதை மறுபரிசீலனை செய்யவே முடியாது என்பதுதான் உண்மை” என்று கூறியுள்ளார்

Total Page Visits: 576 - Today Page Visits: 2

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!