collector office protest | சாலை மறியல் போராட்டம்
கிராம ஊராட்சிகளின் பணிபுரியும் உள்ளாட்சி ஊழியர்கள் பணி நிரந்தரம்,
கொரோனா காலத்தில் அறிவித்துள்ள சிறப்பு ஊக்க தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு
வேலை நிறுத்தம் மறியல் போராட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு
மாவட்ட பொது செயலாளர் சந்தானம் தலைமையில்
CITU சார்பில்
உள்ளாட்சிகளில் பணி புரியும்
மேல்நிலைத் தொட்டி ஆபரேட்டர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள், டெங்கு மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்கள், ஆகியோர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும்,
சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பின் படி குறைந்தபட்ச அரசாணை வெளியிட்டுள்ளது அதில் மேல்நிலைத் தொட்டி ஆபரேட்டர்களுக்கு 14,593 ரூபாயும், தூய்மை பணியாளர் மற்றும் தூய்மை காவலர்களுக்கு 12,593 ரூபாயும் , மற்றும் டெங்கு மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு ரூ.15,593
ரூபாயும், உள்ளிட்டவைகளை தமிழக அரசு உடனடியாக அமுல்படுத்த வேண்டும் எனவும்,
அரசாணை 2561 படி 28.5.2021 தேதி அன்று கொரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து பணிபுரிந்து வந்த தொழிலாளர்களுக்கும் கொரோனா சிறப்பு தொகை நிலவையில் உள்ள ரூ.15000 வாங்கிட கோரியும்,
3 ஆண்டு பணி முடிந்து உள்ளாட்சி தொழிலாளர்கள் அனைவரையும் அரசாணை 385- ன்படி மற்றும் 129-ன் படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும்,
கிராம உள்ளாட்சிகளில் காலியாக உள்ள தூய்மை பணியாளர்கள் உயர்நிலைத் தொட்டி ஆபரேட்டர்கள் காலி பணியிடங்கள் நிரப்பிட வேண்டும் என உள்ளிட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி CITU மற்றும்
திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் சார்பில் வேலை நிறுத்தம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
