TVK Vijay Sangeetha | விஜய் சங்கீதா விவாகரத்து
விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்றால், வீட்டிற்குள் அனுமதிக்க மாட்டேன் என்று வழக்கறிஞர் மூலமாக விஜய் கூறியதாக சங்கீதா குற்றம்சாட்டியுள்ளார்.
செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சங்கீதா தாக்கல் செய்த மனுவில், விஜய் உடனான விவாகரத்திற்கு பிறகு வேறு வீட்டிற்கு செல்லும் வரை நீலாங்கரை வீட்டில் தங்க விஜய் தன்னை அனுமதிக்க உத்தரவிட வேண்டும். நான் பிரிட்டன் குடியுரிமையுடன் லண்டனில் வசித்து வருகிறேன். சென்னையில் எனக்கு தனியாக வீடு இல்லை.. விவாகரத்து கோரியுள்ளதால், தற்போது சென்னையில் வீடின்றி தவிக்கிறேன். எனக்கு வீட்டிற்குள் அனுமதிக்க விஜய் மறுக்கிறார். கோடி கோடியாக சம்பாதிக்கும் விஜய் எனக்கும் என் குழந்தைகளுக்கும் சேர வேண்டிய நியாயமான ஜீவனாம்சம் வழங்க வேண்டும். அதேபோல் விவாகரத்து வழக்கு முடியும் வரை அந்த வீட்டில் வசிக்க எனக்கு உரிமை உள்ளது.
அதனால் வழக்கு முடியும் வரை விஜய்யின் இல்லத்தில் அனைத்து உரிமைகள், வசதிகளுடன் வசிக்க உத்தரவிட வேண்டும். விஜய்யின் அரசியல் சூழல் கருதி பலமுறை சுமூகமாக விவாகரத்து பெற முயற்சி செய்தும், விஜய் பிரிந்து செல்ல மறுக்கிறார். அதுமட்டுமல்லாமல் சென்னை நீலாங்கரை வீட்டில் எனக்கு சரி பாதி பங்கு உள்ளது. அதேபோல் விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்றால், வீட்டில் அனுமதிக்க மாட்டேன் என்று வழக்கறிஞர் மூலமாக விஜய் கூறியதாகவும் குற்றம்சாட்டி இருக்கிறார்.
