TVK Ajitha Agnel | அஜிதாவின் விபரீத முடிவு
தூத்துக்குடியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பெண்கள் அணி நிர்வாகி அஜிதா ஆக்னல், கட்சி பொறுப்பு மறுக்கப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
கட்சி தொடங்கிய காலம் முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் தீவிரமாக உழைத்து வந்த அஜிதா, மாவட்டச் செயலாளர் பதவி வழங்கக்கோரி பனையூர் தலைமை அலுவலகத்தில் விஜயின் காரை மறித்து போராட்டம் நடத்தியிருந்தார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலே தற்கொலை முயற்சிக்கு காரணம் என்று தெரிகிறது.
தற்போது சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அஜிதா அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தவெகவினர் அஜிதாவை திமுகவின் கைக்கூலி என்று கூறியதால் மனமுடைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக அவரது குடும்பத்தினர் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
Total Page Visits: 167 - Today Page Visits: 1
