TVK Vijay speech | எம்.ஜி.ஆர் சொன்னா மாதிரி
திமுக ஒரு தீய சக்தி, தவெக தூய சக்தி என ஈரோட்டில் நடந்த பிரச்சாரத்தில் தவெக விஜய் தெரிவித்துள்ளார்.
ஈரோடு பிரச்சார கூட்டத்தில் பேசிய விஜய்,
நான்கூட யோசிப்பேன், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் ஒரே வார்த்தைச் சொல்லி திமுகவை காலி செய்தார்கள். அப்போது ஏன் இவ்வளவு கடுமையாகப் பேசுகிறார்கள் என்று யோசித்தேன்.
இப்போதான் புரிகிறது. அவர்கள் கூறியதை நான் மீண்டும் கூறுகிறேன். திமுக ஒரு தீய சக்தி, திமுக ஒரு தீய சக்தி…. தவெக ஒரு தூய சக்தி. தூய சக்தி தவெகவுக்கும், தீய சக்தி திமுகவுக்கும்தான் போட்டி.
என்னை முடக்கலாம் என்று நினைக்கிறீர்கள், ஆனால் இந்த சப்தத்தை ஒருபோதும் முடக்க முடியாது. மக்கள் விரோத திமுக அரசை வீழ்த்த மக்கள் சக்தியான நம்மால் மட்டும்தான் முடியும்.
செங்கோட்டையன் நம்முடன் சேர்ந்தது நமக்கு கூடுதல் பலம். இவரைப் போன்று பலர் நம்முடன் வந்து சேரப் போகிறார்கள். அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும்” என்றார்.
