உண்மையின் உறைவிடம்…

Erode vijay campaign | ஈரோட்டில் பேசும் விஜய்

ஈரோடு மாவட்டத்தில் நாளை மறுநாள் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இந்த பரப்புரையில் கலந்துகொள்பவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தவெக தலைமை வெளியிட்டுள்ளது.

மக்கள் சந்திப்பு நடைபெறும் இடங்களில் காவல் துறையின் அறிவுறுத்தலின்படி ஒவ்வொரு BOX-களிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும், கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் வரும் பெண்கள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளி மாணவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் இந்த நிகழ்ச்சியில் நேரடியாக பங்கேற்க அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் வீட்டிலிருந்தபடியே நேரலை ஒளிபரப்பின் மூலம் நிகழ்ச்சியை காணுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்காக வரும் போதும், நிகழ்ச்சி முடிந்து செல்லும் போதும் தலைவரின் வாகனத்தை இருசக்கர அல்லது பிற வாகனங்களில் பின்தொடர்வது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்; பட்டாசு வெடித்தல் உள்ளிட்ட எந்தவித வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி இல்லை என்றும் கட்சி தலைமைக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.

Total Page Visits: 134 - Today Page Visits: 1

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!