உண்மையின் உறைவிடம்…

admin

iran launches drone | ஈரானின் ட்ரோன் தாக்குதல்

துபாய் விமான நிலையம் அருகே அதிகாலையில் நடந்த டிரோன் தாக்குதால் அங்கு விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேற்காசிய பிராந்தியத்தில் இஸ்ரேல் ஈரான் இடையே தொடர்ந்து மோதல் நடக்கிறது. சவுதி, ஓமன், பஹ்ரைன், துபாய் என அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தாளங்களை குறிவைத்து, ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை யு.ஏ.இ மீது ஈரான் 1,800க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியுள்ளது. இது குறித்து துபாய் ஊடக அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; துபாய் […]

Annamalai explains | அண்ணாமலை விளக்கம்

விஜய் தரப்போடு கூட்டணி பேச்சுவார்த்தையே நடக்கவில்லைஎன அண்ணாமலை விளக்கமளித்துள்ளார். பாஜக முன்னாள் மாநில அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்த போது, ‘விஜய் அவர்களுடனான கூட்டணியை பொறுத்தவரைக்கும் நாங்கள் எதுவும் சொல்லவில்லை. இபிஎஸ் அதிகாரப்பூர்வமாக சொல்லிவிட்டார். யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. எடப்பாடி பழனிசாமி அண்ணன் சொன்னதுடன் முடிந்து விட்டதாகவே நாங்கள் பார்க்கிறோம். தவெக ஆன்லைன் மீட்டிங் நடத்தியது பற்றி அவர்களிடம் தான் கேட்க வேண்டும். எங்கள் கூட்டணியின் தலைவராக இருப்பவர் எடப்பாடி பழனிசாமி. முதலமைச்சர் வேட்பாளர் அவர்தான். அவருடையே கருத்தே […]

MK Stalin Campaigns | திக்கட்டும் உதயசூரியன்

தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது பிரச்சாரத்தை இன்று தொடங்கியுள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “உழைப்பை அள்ளிக்கொடுங்கள்! உதயசூரியன் உதிக்கட்டும்! வீடுதோறும் சென்றடைந்துள்ள திராவிட மாடலின் சாதனைகள், இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழ்நாட்டை முன்னேற்றும் தொலைநோக்குத் திட்டங்கள், அரணென அனைவருக்குமான தமிழ்நாட்டைக் காக்கும் கொள்கை உறுதி, துணிச்சல் இதுதான் தி.மு.க. என குறிப்பிட்டுள்ளார்.

Today weather update | வானிலை மையம் தகவல்

நீலகிரி மாவட்டத்தில் நாளை லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், “தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. வடக்கு இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து குமரிக்கடல் பகுதிகள் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இடிமின்னலுடன் கூடிய லேசான மழையும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் […]

Karur stampede issue | தவெக விஜய் ஆஜர்

கரூர் விவகாரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் இன்று சிபிஐ அதிகாரிகள் சுமார் 6 மணி நேரம் மேற்கொண்ட விசாரணை நிறைவடைந்தது. இன்று விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் 6 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். குறிப்பாக கரூர் பிரச்சாரத்திற்கு தாமதமாக வந்தது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தவெக நிர்வாகிகள் உள்ளிட்டோர் வழங்கிய பதில்கள் ஒன்றுக்கு ஒன்று முரணாக இருந்தது. எனவே அதனை மையப்படுத்தி இன்று விஜய்யிடம் விசாரணை நடத்தியதாக தகவல்கள் சொல்லப்படுகிறது.விஜய்யிடம் […]

Tamilnadu election date | சட்டமன்ற தேர்தல்

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடக்கும், மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்து உள்ளார். தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாமில் ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெறும்.அசாம் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9ம் தேதி நடக்கும் : மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்கேரளா சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9ம் தேதி நடக்கும் : மே 4ம் தேதி முடிவுகள் […]

vijay in delhi | நேரில் ஆஜராகும் விஜய்

கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்தின்போது எதிர்பாராமல் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.சம்பவம் குறித்து சி.பி.ஐ. போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு த.வெ.க. பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, இணைப் பொதுச் செயலாளர் சி.டி.நிர்மல்குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்பட பலரிடம் டெல்லி சி.பி.ஐ. அலுவல கத்தில் விசாரணை நடந்தது.மேலும் சி.பி.ஐ. […]

Sasikala New party | சசிகலா கட்சியின் சின்னம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா, தமிழக அரசியல் களத்தில் தனது புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார். சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனது புதிய கட்சியின் பெயர் மற்றும் தேர்தல் சின்னத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.சசிகலா தலைமையிலான கட்சியின் பெயர் ‘அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ (அஇபுதமமுக) என்பதாகும்.வரும் சட்டசபை தேர்தலில் இந்தக் கட்சி தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

Akash lockup death | பிரேத பரிசோதனையில்

அரசு மருத்துவமனை வழங்கிய பிரேத பரிசோதனை அறிக்கையில், ஆகாஷின் உடலில் மொத்தம் 28 இடங்களில் வெளிப்புற மற்றும் உட்புற காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வெறும் ‘கீழே விழுந்ததால்’ ஏற்பட்ட காயங்கள் அல்ல என்பதை மருத்துவக் குறிப்புகள் உணர்த்துகின்றன. அரசு மருத்துவமனை வழங்கிய பிரேத பரிசோதனை அறிக்கையில், ஆகாஷின் உடலில் மொத்தம் 28 இடங்களில் வெளிப்புற மற்றும் உட்புற காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வெறும் ‘கீழே விழுந்ததால்’ ஏற்பட்ட காயங்கள் அல்ல என்பதை […]

Gas Cylinder issue | சிலிண்டர் சீக்கிரம் வரும்

10 நாட்களில் வணிக பயன்பாட்டிற்கான LPG சிலிண்டர் பிரச்சினை சரி ஆகும் என அமைச்சர் பூரி தெரிவித்துள்ளார். இது குறித்து மக்களவையில் விளக்கமளித்த பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, “வணிக பயன்பாடு சிலிண்டர் விநியோகம் 10 நாட்களில் சீரடையும். வீட்டு உபயோக எரிவாயு விநியோகத்துக்கு முன்னுரிமை தரப்படுகிறது. பெட்ரோல் டீசல், மண்ணெண்ணெய், விமான எரிபொருள் இருப்பில் எந்த குறையும் இல்லை.போர் நீண்ட காலம் நீடித்தாலும், இந்தியாவில் இயற்கை எரிவாயு உற்பத்தியும் விநியோக […]

Aadhav arjuna condemns | திமுக தான் காரணம்

திமுக மிரட்டல் கொடுத்ததால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, “எம்ஜிஆருக்கு பின் ஒரு பிரபலமான நடிகராக இருந்து அரசியலுக்கு வர நினைத்தவர் ரஜினிகாந்த். தமிழக அரசியலுக்கு வந்து சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்று விரும்பியவர். ஆனால் திமுக குடும்பம் ரஜினிகாந்துக்கு பல மிரட்டல்களை கொடுத்து அரசியலுக்கு வரவிடாமல் பார்த்துக் கொண்டது ஆனால் அவர் இன்று என்ன ஆனார், கடைசியில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பிலேயே நடிக்கச் […]

Tamilnadu governor | பொறுப்பு ஆளுநர்

மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, அம்மாநிலத்தின் ஆளுநராக ஆர்.என். ரவியும், தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக கேரள ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் நியமனம் செய்யப்பட்டனர். இந்நிலையில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் கேரள மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக பதவியேற்றுக்கொண்டார்.உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி பொறுப்பு ஆளுநராக அர்லேகருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]

Gas Cylinder issue | சிலிண்டர் இல்லை

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேலின் போர் சர்வதேச அளவில் பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் கடந்த சில நாட்களாக கேஸ் சிலிண்டர் எரிவாயு பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கிறது. ஓட்டல்களில் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக டீ, காபி, ஃபிரைடு ரைஷ் உள்ளிட்டவை குறைப்பு, மூடப்படும் நிலை, மண்டபங்களில் திருமணங்களை நடத்துவதில் சிக்கல் என நெருக்கடி அதிகரித்து வருகிறது. படிப்படியாக நெருக்கடி அதிகரித்து 10, 15 நாட்களை தாண்டி விட்டால் வீட்டிற்கே சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் என கூறப்படுகிறது.

trump epstein statue | டைட்டானிக் பாணியில்

அமெரிக்க தலைநகரான வாஷிங்கடன் டிசியில் உள்ள நேஷனல் மால் என்ற வணிக வளாகத்தில் எப்ஸ்டீன் உடன் டிரம்ப் இருக்கும் சிலை திறக்கப்பட்டுள்ளது. டைட்டானிக் படத்தில் ஆருயிர் காதலர்களாக ஜாக் மற்றும் ரோஸ் கப்பலின் முகப்பில் கைநீட்டி நிற்கும் காட்சி உலகப் பிரசித்தம். அதேபோல எப்ஸ்டீன் – டிரம்ப் நிற்பதுபோல இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. சீக்ரெட் ஹேண்ட்ஷேக் என்ற கலை அமைப்பு இந்த சிலையை நிறுவியுள்ளது. டிரம்ப்புக்கு எதிரான போராட்ட வடிவமாக இந்த சிலை அங்கு நிறுவப்பட்டுள்ளது.முன்னதாக நேஷனல் […]

Today weather update | வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் நாளை முதல் வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும். அதேபோல் நாளை முதல் 15 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். […]

PM Modi in Trichy | டிரோன்கள் பறக்க தடை

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு, திருச்சியில் நாளை (பிப்.11) டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சரவணன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருச்சி மாவட்டத்துக்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி நாளை முழுவதும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என […]

Gas cylinder stopped | பாரத் பெட்ரோலியம் விளக்கம்

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாக எழுந்துள்ள செய்திகளுக்கு பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் விளக்கம் அளித்துள்ளது. வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர்கள் விநியோகத்தில் தற்போது எந்த சிக்கலும் இல்லை என்றும், போதிய இருப்பு உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், சிலிண்டர் பதிவு செய்வதற்கான கால இடைவெளி மட்டும் 21 நாட்களில் இருந்து 25 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

Gas cylinder crisis | இந்தியன் ஆயில் அறிவிப்பு

சென்னையில் வணிக சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான போர் எதிரொலியாக சர்வதேச அளவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. போதிய அளவில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது பல்வேறு நகரங்களில் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.கச்சா எண்ணெய் சுத்திகரிப்பின்போது, சமையலுக்கு பயன்படும் எல்பிஜி என்னும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு பிரித்தெடுக்கப்படுகிறது. தற்போது வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், கச்சா […]

Today weather update | வானிலை மையம் தகவல்

தென் தமிழகத்தில் நாளை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மார்ச்.11ம் தேதி தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மார்ச்.12ம் தேதி தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.மார்ச்.13ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் […]

manjummal boys director | பாலியல் குற்றச்சாட்டு

மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் இயக்குநர் சிதம்பரம் எஸ். பொதுவாலுக்கு எர்ணாகுளம் அமர்வு நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியது. கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள எலம்குளம் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் எர்ணாகுளம் தெற்கு போலீசில் புகார் அளித்துள்ளார்.டைரக்டர் சிதம்பரம், தனது பிளாட்டில் புகுந்து பாலியல் நோக்கத்துடன் தவறாக நடந்து கொண்டதாக புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் டைரக்டர் சிதம்பரம் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐ.பி.சி. பிரிவு 74 மற்றும் […]

TVK Protest announced | தவெக அதிரடி

தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 3 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக என். ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: “விகிதாசாரப் பிரதிநிதித்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான (Caste-survey) அரசாணையை உடனடியாக வெளியிடக் கோருகிறோம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் தமிழகம் எங்கும் பரவலாகி வரும் போதைப் பொருட்களையும் தடுக்கத் தவறிய தமிழக அரசைக் கண்டிக்கிறோம். அரசியல் கட்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் […]

old woman issue | நால்வர் வெறிச்செயல்

மத்தியப் பிரதேசத்தின் காண்ட்வா மாவட்டத்தில் 90 வயது மூதாட்டி மீது கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வா மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் 90 வயது மூதாட்டி தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.கடந்த மார்ச் 6 நள்ளிரவு நேரத்தில் மூதாட்டி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்த நான்கு பேர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.தனியாக இருந்த மூதாட்டியை அவர்கள் நால்வரும் கொடூரமாக கூட்டுப் பாலியல் வன்கொடுமை […]

Mamata banerjee announces | மம்தா பானர்ஜி அதிரடி

மேற்கு வங்கத்தில் பத்தாம் வகுப்பு முடித்த இளைஞர்களுக்கு மாதம் ரூ.1,500 நிதியுதவி வழங்கும் யுவசக்தி திட்டத்தை மம்தா பானர்ஜி அறிவித்தார். 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று வேலையில்லாமல் இருக்கும் 21 வயது முதல் 40 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் மாதந்தோறும் 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.நேற்று (மார்ச் 7) முதலே இது உடனடியாக அமலுக்கு வருவதாக மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் இருந்து பெருமளவிலான பெயர்களை […]

Today weather update | வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் இன்று முதல் வரும் மார்ச் 14ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுளள அறிக்கையில், “மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 08-03-2026. கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் மிக லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். […]

Iran war ship | ஐரிஸ் டெனா

இந்தியாவின் கடற்படை அழைப்பை ஏற்று விசாகப்பட்டினத்தில் நடந்த ‘மிலன்-2026’ சர்வதேசக் கடற்படைப் பயிற்சியில் பங்கேற்க ஈரான் போர் கப்பலான ‘ஐரிஸ் டெனா’ வந்திருந்தது. பயிற்சி முடிந்து மார்ச் 4 அன்று இலங்கை அருகே இந்திய பெருங்கடலில்சென்றுகொண்டிருந்த ஐரிஸ் டெனாவை அமெரிக்க நீர் மூழ்கி கப்பல் தாக்கி மூழ்கடித்தது. இதில் ஈரான் கப்பலில் இருந்து 87 பேர் கொல்லப்பட்டனர்.இந்தியாவின் விருந்தினராக சென்ற எங்கள் கப்பலை முன்னறிவிப்பின்றி தாக்கிய அமெரிக்கா விரைவில் வருத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்தது.இந்நிலையில் இந்த […]

TVK Vijay Sangeetha | விஜய் சங்கீதா விவாகரத்து

விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்றால், வீட்டிற்குள் அனுமதிக்க மாட்டேன் என்று வழக்கறிஞர் மூலமாக விஜய் கூறியதாக சங்கீதா குற்றம்சாட்டியுள்ளார். செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சங்கீதா தாக்கல் செய்த மனுவில், விஜய் உடனான விவாகரத்திற்கு பிறகு வேறு வீட்டிற்கு செல்லும் வரை நீலாங்கரை வீட்டில் தங்க விஜய் தன்னை அனுமதிக்க உத்தரவிட வேண்டும். நான் பிரிட்டன் குடியுரிமையுடன் லண்டனில் வசித்து வருகிறேன். சென்னையில் எனக்கு தனியாக வீடு இல்லை.. விவாகரத்து கோரியுள்ளதால், தற்போது சென்னையில் வீடின்றி தவிக்கிறேன். எனக்கு வீட்டிற்குள் […]

cm stalin speech | முக ஸ்டாலின் பேச்சு

மதுரை திருமங்கலத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தி.மு.க.வில் இணையும் பிரம்மாண்ட விழா நடைபெற்றது. இதில் ஓ.பி.எஸ்-ஐ வரவேற்றுப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், லேட்டாக வந்தாலும், எம்.ஜி.ஆர். இருந்த தாய்க்கழகமான தி.மு.க.வுக்கே ஓ.பி.எஸ் திரும்பியுள்ளார். இந்த மேடையில் இருப்போம் என அவரே சில காலத்திற்கு முன்பு வரை எதிர்பார்த்திருக்க மாட்டார் என்று முதல்வர் குறிப்பிட்டார். மேலும், எம்.ஜி.ஆருக்கு நீங்க மட்டும் ரசிகன் அல்ல, நானும் ரசிகன்தான். தி.மு.க எம்.ஜி.ஆரை வளர்த்தது, எம்.ஜி.ஆர் தி.மு.கவை வளர்த்தார். கலைஞரைத் தலைவராக […]

social media restrictions | கர்நாடக அரசு அதிரடி

கர்நாடகா மாநிலத்தில் 16 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்த அம்மாநில முதல்வர் சித்தராமையா தடை விதித்து உள்ளார். கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற பட்ஜெட் உரையின் போது இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். சிறுவர் மற்றும் இளைஞர்களின் மனநலம், கல்வி மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கு சமூக ஊடகங்கள் அதிகப்படியான தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக அரசு கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக 16 வயதுக்கு குறைவான குழந்தைகள் சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுவது அவர்களின் படிப்பிலும், மனநிலையிலும் பாதிப்பை […]

Vijay Trisha issue | விஜய் திரிஷா உறவு

பிப்ரவரி 2026-இல் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியது பரபரப்பை அதிகரித்தது. சங்கீதா மனுவில், விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகக் குற்றம்சாட்டியதால், பலரும் திரிஷாவுடன் தொடர்புபடுத்தினர்.இதனிடையே, சென்னையில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விஜயும் திரிஷாவும் ஒரே காரில் வந்து ஜோடியாக பங்கேற்ற வீடியோ வைரலானது. இது ரசிகர்களிடையே அதிருப்தியையும், சர்ச்சையையும் தீவிரப்படுத்தியது. சில நடிகைகள் சங்கீதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். கணவருக்கு நடிகையுடன் தொடர்பு என மனைவி கூறிவிட்டார். அது […]

TN Governor Changed | ஆளுநர் திடீர் மாற்றம்

சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்தபோஸ் திடீர் ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கேரள மாநில ஆளுநராக உள்ள ஆர்.வி. அர்லேக்கருக்கு தமிழக மாநிலத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க ஆளுநராக கடந்த மூன்றரை ஆண்டுகளாக இருந்தவர் சி.வி.ஆனந்த போஸ். முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், ஆனந்தபோஸுக்கும் இடையே பல விஷயங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று டெல்லி சென்ற ஆளுநர் ஆனந்தபோஸ், […]

DMDK LK Sutheesh | தேமுதிக அறிவிப்பு

தேமுதிக சார்பில் மாநிலங்களவை எம்.பி. வேட்பாளராக எல்.கே.சுதீஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த தேமுதிக சார்பில் வெளியான அறிவிப்பில், ‘2026-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ராஜ்யசபா தேர்தலில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் வேட்பாளராக கழகத்தின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் போட்டியிடுவார் என்று தலைமை கழகத்தின் சார்பாக கழக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவின் சகோதரரான இவர், அக்கட்சியின் பொருளாளராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

iran warns america | ஈரான் எச்சரிக்கை

ஐரிஸ் டெனா போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்ச்சி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-ஈரான் கடற்கரையில் இருந்து 2 ஆயிரம் மைல்கள் தொலைவில் கடலில் அமெரிக்கா ஒரு அட்டூழியத்தைச் செய்துள்ளது.கிட்டத்தட்ட 130 மாலுமிகளை ஏற்றிச் சென்ற இந்திய கடற்படையின் விருந்தினரான ஐரிஸ் டெனா போர்க்கப் பலை சர்வதேச கடல்பகுதியில் எந்த எச்சரிக்கையும் விடுக்காமல் தாக்கி உள்ளது.எனது வார்த்தைகளை குறித்து […]

Sengottaiyan press meet | செங்கோட்டையன் பேட்டி

அதிமுகவில் ஜெயக்குமாருக்கு சீட் கிடைக்காது என்று தவெக நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், தவெகவால் காங்கிரஸ் கட்சிக்கு பயன் கிடைத்துள்ளது. என்டிஏ கூட்டணியாக இருந்தாலும், திமுக கூட்டணியாக இருந்தாலும் சரி.. எங்களை காட்டி கூடுதல் சீட்டு பெறும் என்ற நிலை உள்ளது. எங்களை காட்டி கூடுதல் சீட்டுகளை காங்கிரஸ் பெற்றுள்ளது. தவெக தனித்துப் போட்டியிடுமா என்பதை பொறுத்திருந்து பாருங்கள். அதேபோல் ஜெயக்குமாருக்கு அதிமுகவில் சீட் கிடைக்கப் போவதில்லை.. அவர் வேண்டுமானால் தவெகவுக்கு தாராளமாக […]

opaneerselvam byte | ஓ.பன்னீர்செல்வம் உறுதி

இந்த தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம், ”திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையேற்று, பல்வேறு இயக்கங்களில் இருந்து திமுகவில் இணைகின்ற நிகழ்வு வரும் 7 ஆம் தேதி நடைபெறுகிறது. அந்த நிகழ்வின் முன்னேற்பாடாக பூமி பூஜை போட்டு நிகழ்வை தொடங்கியுள்ளோம். ஐந்தாண்டு கால சிறப்பான ஆட்சியை நாட்டு மக்களுக்கு எது தேவையோ அதை அறிந்து, புரிந்து செயல்படுத்த வேண்டும் என்ற நல்ல […]

Today weather update | வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் வருகிற 10-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனவானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இன்று முதல் 6-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக […]

dhoni traffic violation | தோனிக்கு அபராதம்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அதிக வேகத்தில் வாகனம் ஓட்டியதாக அவருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ராஞ்சியில் உள்ள தனது இல்லத்திற்கு அருகே அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் வாகனம் ஓட்டியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மார்ச் 1 ஆம் தேதி, கான்கே ரிங் சாலையில் பிர்சா வேளாண் பல்கலைக்கழகம் அருகே அவரது சொகுசு கார் அதிவேகத்தில் சென்றதை அங்குள்ள தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பதிவு செய்ததையடுத்து, மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு […]

selvaperundhagai byte | செல்வப்பெருந்தகை பேட்டி

திமுக எங்களுக்கு கெடு விதிக்கவில்லை. பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை. மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தோம் என செல்வப்பெருந்தை தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், எங்கள் கூட்டணி வலுவாக இருக்கிறது. தொகுதிப் பங்கீடு பேச்சு தொடர்ந்து நடந்து வருகிறது, முடிந்த பிறகு உங்களிடம் அறிவிப்போம்” என்று தெரிவித்தார். இதனிடையே, திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், “அவர்கள் (காங்கிரஸ்) கேட்பது வேறு, நாம் (திமுக) சொல்வது வேறு. திமுக – காங்கிரஸ் கூட்டணி விவகாரத்தை சுமுகமாக முடிக்கவே […]

double murder arrest | நெல்லை இரட்டை கொலை

திருநெல்வேலியில் இரட்டைக் கொலை விவகாரத்தில் போலீசாரால் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரும்பத்து பகுதியில் நேற்றிரவு சாலையில் நின்றிருந்தவர்கள் மீது கஞ்சா போதைக் கும்பல் கொடூரத் தாக்குதல் நடத்தியதில் இருவர் உயிரிழந்தனர். ஆறு பேர் படுகாயம் அடைந்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.இந்த சம்பவம் தொடர்பாக கொலை, கொலை முயற்சி உட்பட எட்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், ஐந்து தனிப் படைகள் […]

Smirit Mandana | ஸ்மிருதி மந்தனா அசத்தல்

மகளிர் அணியின் பேட்டர் தரவரிசையை இன்று ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஒருநாள் பேட்டர் தரவரிசையில் முதல் இடம் பிடித்து அசத்தியுள்ளார். தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட்டைப் பின்னுக்குத் தள்ளி ஸ்மிருதி மந்தனா முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவர் 790 ரேட்டிங் புள்ளிகளுடன் தற்போது உலகின் சிறந்த பேட்டராகத் திகழ்கிறார்.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சமீபத்திய தொடரில் அவர் அரைசதம் விளாசி அசத்தியது, இந்த தரவரிசை முன்னேற்றத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.கடந்த 2025-ம் ஆண்டு முழுவதும் சிறப்பான […]

Thirumavalavan speech | திருமாவளவன் காட்டம்

திமுகவோடு பேரம் பேசும் கட்சி அல்ல நாங்கள் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ஆட்சியில் பங்கு என்பதை முதன்முதலில் முன்வைத்தது விசிக தான். ஆனால் தமிழ்நாட்டில் அதற்கான காலம் கனியவில்லை. இருந்தாலும் அதிகாரப்பங்கு என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என கூறினார் திருமாவளவன். தொடர்ந்து அவர் பேசுகையில், எங்களுடைய கருத்துக்களை உரிமையோடு பகிர்ந்துள்ளோம். நாங்கள் பேரம் பேசவில்லை. திமுக தலைமையிலான கூட்டணியை வெற்றி பெற வைக்க வேண்டும். தமிழ்நாட்டில் மோடியின் வித்தை […]

Anbil mahesh byte | ஸ்டாலினும் ராகுலும்

ஸ்டாலினும், ராகுலும் ஒரே போன் காலில் இந்த பிரச்சனையை முடித்துவிடுவார்கள் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். அன்பில் மகேஸ் தனியார் தொலைக்காட்சிக்கு நேர்காணல் அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் நல்ல புரிதலான உறவில் இருக்கிறார்கள். இது ஜனநாயக நாடு. ஒவ்வொருவருக்கும் ஒரு விருப்பம் உள்ளது. யார் என்ன வேண்டுமானால் பேசிக் கொள்ளுங்கள். தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் ஒரு கூட்டணியை இவ்வளவு தூரம் கொண்டு செல்வது […]

iran-revolutionary-guards | இஸ்ரேலில் தாக்குதல்

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் டெல் அவிவ் அலுவலகத்தின் மீது “திடீர் ஏவுகணை” தாக்குதல் நடத்தியதாக ஈரான் புரட்சிகரப் படைகள் இன்று அறிவித்துள்ளன. இதனால் நெதன்யாகுவின் நிலை என்ன என்று தெரியவில்லை என்றும் ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நேற்று முன் தினம் திடீர் தாக்குதலை நடத்தின. இதில் ஈரான் உச்ச தலைவர் அயாத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நேற்று முன் தினம் […]

Sengottaiyan speech | செங்கோட்டையன் விளக்கம்

விஜய் துண்டுச் சீட்டைப் பார்த்துப் பேசுவது குறித்து எழுந்த விமர்சனத்தை, அரசியல் நடைமுறையின் ஒரு சாதாரண அம்சமாக மாற்றிப் புரியவைத்திருக்கிறார் செங்கோட்டையன். இது தேர்தலை முன்னிட்டு உருவாகும் புதிய அரசியல் விவாதங்களில் ஒன்றாக மாறியுள்ளது.அவர் கூறுகையில், அரசியல் மேடைகளில் முக்கியமான தரவுகள், புள்ளிவிவரங்கள், திட்ட அறிவிப்புகள் போன்றவற்றை பேசும் போது குறிப்புகளைப் பார்த்து பேசுவது சாதாரணமான விஷயமே எனத் தெரிவித்தார். “பிரதமர் நரேந்திர மோடி முதல் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வரை பல முக்கிய தலைவர்கள் […]

Today Weather update | வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் வருகிற 7-ந்தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.குமரிக்கடல் பகுதிகளிலிருந்து லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இன்று முதல் நாளை மறுநாள் வரை மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் […]

israel-pm-netanyahu | இஸ்ரேல் பிரதமர்

ஈரான் குடிமக்கள் தற்போதைய இஸ்லாமிய ஆட்சியை வீழ்த்தி தங்களை விடுவித்துக் கொள்ள முன்வர வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கோரிக்கை விடுத்துள்ளார். எக்ஸ் (X) தளத்தில் நெதன்யாகு வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், “ ஈரானின் தைரியமான மக்களே, இந்த பொன்னான வாய்ப்பை நழுவ விடாதீர்கள். இது தலைமுறைக்கு ஒருமுறை மட்டுமே வரும் வாய்ப்பு. உங்க வாழ்க்கையை கசப்பாக்கிய பயங்கரவாத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர லட்சக்கணக்கில் வீதிக்கு வாருங்கள். வரவிருக்கும் நாட்களில் ஆயிரக்கணக்கான இலக்குகளை […]

today weather update | வானிலை மையம் தகவல்

மார்ச் 4-ந்தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புஎன வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தென் தமிழகம், மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.நாளை தென் தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய […]

sikkim today earthquake | அடுத்தடுத்து நிலநடுக்கம்

சிக்கிமில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சிக்கிமில் கியால்ஷிங் மற்றும் மங்கன் பகுதிகளில் இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. முதலில், சிக்கிமின் கியால்ஷிங் பகுதியில் இன்று காலை 11.34 மணியளவில் ரிக்டர் 4.6 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சிக்கிமின் மங்கன் பகுதியில் மதியம் 12.17 மணியளவில் ரிக்டர் 3.5 […]

Thailand tiger death | புலிகள் உயிரிழப்பு

தாய்லாந்தின் ‘டைகர் கிங்டம்’ பூங்காவில், கடந்த 2 வாரங்களில் 72 புலிகள் ‘கேனைன் டிஸ்டெம்பர் வைரஸ்’ தொற்றால் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிக வேகமாக பரவும் இந்த வைரஸ் பாதிப்பால் அந்நாட்டின் சுற்றுலா துறை முடங்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த உயிரிழப்புகளை தொடர்ந்து, தொற்று மேலும் பரவாமல் தடுக்க பூங்கா நிர்வாகம் தற்போது தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேவேளை முன்னர் 2004 ஆம் ஆண்டு சோன்புரி மாகாணத்தில் உள்ள ஒரு பூங்காவில் பறவைக் […]

OTT platform banned | மத்திய அரசு அதிரடி

மத்திய அரசின் விசாரணைக்குப் பிறகு பின்வரும் ஐந்து தளங்களும், அவற்றுடன் தொடர்புடைய இணையதளங்கள் மற்றும் செயலிகளும் உடனடியாக முடக்கப்பட்டுள்ளன: தடைக்கான முக்கிய காரணங்கள்: அரசின் தொடர் நடவடிக்கை: கடந்த சில மாதங்களாகவே மத்திய அரசு சிறிய அளவிலான ஓடிடி தளங்களைக் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

nallakannu passed away | மறைந்தார் போராளி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சமூக விடுதலை போராட்ட வீரருமான நல்லகண்ணு உடல் நலக்குறைவால் காலமானார். தோழர் இரா. நல்லகண்ணு கட்சியில் உறுப்பினராக சேரும் பொழுது கட்சிக்கு வயது 17.15 வயதிலேயே நெல்லை மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தெருக்களிலே இந்திய விடுதலைக்கு முழக்கமிட்ட சின்னஞ்சிறு இளைஞர். அடிமைப்பட்டு கிடக்கும் இந்தியாவிற்கு என்று விடுதலை வரும் என்ற தாகம் நெஞ்சிலே தேங்கிக் கிடந்த நேரம்… தன் வயதொத்த இளைஞர்களுடன் வீதிகளிலே மகாகவி பாரதியின் ‘என்று தணியும் இந்த சுதந்திர […]

Today Weather update | வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் மார்ச் 1-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,நேற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, கிழக்கு திசையில் நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது கிழக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவிழக்கக்கூடும்.தெற்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு […]

ADMK OPS Byte | ஓபிஎஸ் அறிவிப்பு

எந்த சூழ்நிலையிலும் தனிக்கட்சி தொடங்க மாட்டேன் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ஒவ்வொரு மாதமும் அடிப்படை தொண்டர்கள் உரிமைகள் மீட்கும் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டுவேன். அதில் எந்த நிலையிலும் நான் தனிக் கட்சி தொடங்கமாட்டேன் என்று அறிவித்திருந்தேன். அ.தி.மு.க-வின் அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்கவே தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தை தொடங்கினேன். எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் தொண்டர்களுக்காக கட்சி நடத்தினார்கள். கட்சியில் இருந்து பிரிந்தவர்களை 1991-ல் ஒன்றிணைத்தவர் ஜெயலலிதா. தாலிக்குத் தங்கம், பெண்களுக்கு […]

TVK Vijay Speech | இது ஒரு போர்

அறிவாலயம் பக்கம் யார் சென்றாலும், கூட்டணியில் சேர்த்துகொள்கிறார் ஸ்டாலின் என தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை. சட்டம்-ஒழுங்கு காணாமல் போய் ரொம்ப நாளாகிவிட்டது. நாமும் கேள்வியாக கேட்கிறோம். ஆனால், பதில் வருவதே இல்லை. நிறைய மலைகிராமங்களில் பஸ் வசதியும் மருத்துவமனை வசதியும் இல்லை. தமிழ்நாட்டுல பெண்கள் பாதுகாப்பு கொட்டி கிடக்குதாம். கேட்குறவன்லாம் என்ன கேசரி சாப்பிட்டுட்டு இருக்கானா? பெண்கள், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு […]

TN Voter List | பட்டியல் வந்தாச்சு..!

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 5.67 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.இத்தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியலைத் திருத்தும் பணிகளை தலைமைத் தேர்தல் ஆணையம் 2025ல் தொடங்கியது.இதற்காக, கடந்த நவம்பர் 4 முதல் டிசம்பர் 14 வரை எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி நடைபெற்றது.இதன் பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19ஆம் தேதி வெளியிடப்பட்டது.இந்நிலையில், இன்று தமிழ்நாட்டின் இறுதி […]

Embassy of india | உடனடியாக வெளியேறுங்கள்

ஈரானில் அரசுக்கு எதிராக தெஹ்ரான் மற்றும் பிற நகரங்களில் ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் பதற்றமான சூழலை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த போராட்டம் நடந்து வருகிறது. அதாவது, ஈரான், அமெரிக்கா இடையே போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு 10 முதல் 15 நாட்கள் வரை காலக்கெடு விதித்துள்ளார். இந்த காலக்கெடுவிற்குள் தீர்வு எட்டப்படாவிட்டால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற […]

PM Modi Greets | பிரதமரின் புகழாரம்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆற்றிய மக்கள் பணி என்றும் என் மனதில் நிற்கும் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர், பெண்கள் சக்தியின் ஒரு வெளிப்பாடாகவே ஜெயலலிதா இருந்தார். அவரின் தேசப்பக்தி மிகப்பெரியது. மாநிலத்தின் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க ஜெயலலிதா கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார்.சமூக நலனுக்காக பாடுபட்டவர்கள், பொதுமக்களுக்கு முன்னுரிமை அளித்தவர்கள் எப்போதும் மக்களின் இதயங்களில் நிலைத்திருக்கிறார்கள். ஜெயலலிதா அத்தகைய பிரபலமான தலைவர்களில் ஒருவர். பிப்ரவரி 24-ந் தேதி அவரது பிறந்தநாள் […]

TVK Vijay pollfray| ஆதவ் அர்ஜூனா தகவல்

வடசென்னையில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டியிடுவார் என நினைக்கிறேன் என தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். ஆதர்வ் அர்ஜுனா பேசுகையில், தவெக தலைவர் விஜயின் எண்ண ஓட்டம் பற்றி எனக்குத் தெரியும். அவர், வடசென்னையில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் தான் போட்டியிட வாய்ப்புள்ளது. ஏனென்றால், 50, 60 வருடங்களாக வடசென்னையை ஒதுக்கி திமுக செய்த சூழ்ச்சியை முறியடிக்கக் கூடிய ஒரே ஒருவர் தவெக தலைவர் விஜய் தான் எனவும் […]

Edappadi condemns dmk | என்ன செஞ்சீங்க

திருப்பூரில் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இந்த விவகாரத்தில் தமிழக அரசின் அணுகுமுறை குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “கொலை, கொள்ளை என்பதையெல்லாம் தாண்டி, தீவிரவாத தாக்குதல் எனும் கொடூர உச்சத்துக்கு தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கை சீர்குலைத்து வைத்திருக்கிறது திமுக அரசு. தீவிரவாதிகள் கைது என்பது தமிழகத்தில் மத்திய அரசின் என்ஐஏ […]

Pakistan earthquake | காலையில் நிலநடுக்கம்

வடக்கு பாகிஸ்தானில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 9.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4. ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் அல்லது உயிரிழப்பு ஏற்பட்டது குறித்து உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.புர்ஹானின் வடகிழக்கில் 11 கி.மீ. தூரத்திலும், 14 கி.மீ. ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் கைபர் பக்துன்க்வா, இஸ்லாமாபாத், ராவல்பிண்டியில் உணரப்பட்டுள்ளது.வெள்ளிக்கிழமை கைபர் பக்துன்க்வா, பஞ்சாப் மாநிலத்தில் 5.9 […]
error: Content is protected !!