உண்மையின் உறைவிடம்…

Agri bussiness Festival | வேளாண் வணிக திருவிழா

சென்னை நந்தம்பாக்கத்தில் வேளாண் வணிகத் திருவிழாவை நாளை மறுநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

வேளாண்மை மற்றும் தோட்டக்கலை விளைபொருட்களின் மதிப்புக்கூட்டுதல், பதப்படுத்துதல் போன்ற தொழில்நுட்பங்களை கடைப்பிடித்து உள்ளூர் மற்றும் ஏற்றுமதி சந்தை வாய்ப்பினை அதிகரித்தல், கருத்தரங்குகள் மற்றும் கலந்துரையாடல்கள், உற்பத்தியாளர்கள்- வணிகர்கள் சந்திப்பு போன்ற பல்வேறு அம்சங்களுடன், உழவர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், மாணவர்கள், பொதுமக்கள், உணவு பதப்படுத்தும் அமைப்புகள், ஏற்றுமதியாளர்கள், இயற்கை நல ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவரும் பயன்பெறும் வகையில் இந்த ஆண்டின் 2-வது நிகழ்வாக “வேளாண் வணிகத் திருவிழா-2025 ”நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் 27.09.2025 மற்றும் 28.09.2025 ஆகிய இரு தினங்களில் நடத்தப்பட உள்ளது.
இவ்விழாவினை மிகச்சிறப்பாக நடத்த தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. வேளாண் வணிகத் திருவிழா 2025-ஐ மாண்புமிகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 27-ம் தேதி தொடங்கி வைத்து, உழவர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கி விழா சிறப்புரை ஆற்றுகிறார்.

Total Page Visits: 596 - Today Page Visits: 1

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!