உண்மையின் உறைவிடம்…

Thakkaar book launch | உள்ளதை உள்ளபடி

ஒருங்கிணைந்த குடும்ப உறவுகளின் குரலாக ஒலிக்க தொடங்கிய தக்கார்…!

சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் தக்கார் குரல் மாத இதழ் வெளியீட்டு விழா காந்தி ஜெயந்தி நாளான கடந்த 2 ஆம் தேதி நேற்று முன்தினம் நடைபெற்றது.

தக்கார் குரலின் ஆசிரியரும், வெளியீட்டாளருமான யூசுப் பாஷா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பா.ஜோதிமணி, அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியின் நிர்வாக அலுவலர் துணை ஆட்சியர் டீ.முரளி, மூத்த பத்திரிக்கையாளர் ம.வீ.ராஜதுரை, சென்னை பத்திரிக்கையாளர் மன்ற தலைவர் ம.சுரேஷ் வேதநாயகம், பொதுசெயலாளர் மு.ஆசிப், வணக்கம் இந்தியா ஆசிரியர் ச.சஞ்சய் காந்தி, நியூஸ் தமிழ் தொலைக்காட்சியின் பணி ஒதுக்கீடு துறை தலைவர் எஸ்.பாண்டியம்மாள் ஆகியோர் முன்னிலையில் தக்கார் குரல் நாளிதழும், தக்கார் குரலின் இணைய தள பக்கமும் திறக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய நியூஸ் தமிழ் தொலைக்காட்சியின் பணி ஒதுக்கீடு துறை தலைவர் எஸ்.பாண்டியம்மாள் கூறியதாவது,

நடுநிலையாக ஒரு செய்தியை பொதுமக்களுக்கு வழங்குவது என்பது ஒரு சவாலான விஷயம். நடுநிலையான செய்திகளை வழங்கும்போது பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அனைத்தையும் கடந்து சாமானியர்களின் தக்கானாக இந்த தக்கார் வெற்றி பெற வாழ்த்துக்கள் என அவர் தெரிவித்தார்.

அடுத்ததாக பேசிய சென்னை பத்திரிக்கையாளர் மன்ற தலைவர் சுரேஷ் வேதநாயகம்,

தற்போது இருக்கும் பத்திரிக்கைகளே தாக்கு பிடிக்க முடியாத சூழ்நிலையில் இந்த தக்கார் குரல் துவக்கம் என்பது ஒரு சவாலான விஷயம் தான் என அவர் தெரிவித்தார்.

மேலும் நிகழ்ச்சியில் பேசிய சென்னை உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி பேசுகையில்,

இந்த தக்கார் குரலை துவக்கி இருக்கும் யூசுப் பாஷாவை 14 ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்தேன். அன்று அவருடன் யார் யார் எல்லாம் இருந்தார்களோ அவர்களே இன்றும் அவருடன் பயணிக்கிறார்கள். அனைவருக்கும் நட்பு வட்டம் மாறலாம். ஆனால் 14 வருடங்களாக நட்பு வட்டத்துடன் இருக்கும் தக்காரான யூசப் பாஷா மட்டுமே தக்கார் குரல் நடத்த தகுதியானவர் ஆவார்.

இறுதியாக பேசிய நூலாசிரியர் யூசுப் பாஷா பேசுகையில்,

இங்கு இருக்கும் அனைவரும் எனது குடும்ப உறவுகள் தான். இந்த குடும்ப உறவுகளின் உதவியால் சாமானியர்களின் பிரச்சனைகளை உண்மையை உள்ளது உள்ளபடி ஓங்கி ஒலிக்கும் குரலாக தக்கார் குரல் இருக்கும் என அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டு தக்கார் குரலின் குடும்ப உறுப்பினர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் தக்கார் குரலின் குடும்ப உறுப்பினரான மறைந்த முரளியின் நினைவாக அவருடைய குடும்பத்தாருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

Total Page Visits: 709 - Today Page Visits: 1

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!