உண்மையின் உறைவிடம்…

TVK Meeting salem | தவெக சந்திப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சியின் சார்பாக சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் தாளமுத்து நடராஜன் மைதானத்தில் நாளை நிர்வாகிகள் சந்திப்பு நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் தவெக தலைவர் விஜய்யும் கலந்துக்கொள்ள உள்ளதால், இதற்காக ஏற்பாடுகள் கடந்த சில தினங்களாக நடந்து வந்தது. இந்நிலையில் தவெக கூட்டம் நடக்கவுள்ள இடத்தில் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன் நேரில் ஆய்வு செய்தனர்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், சேலத்தை பொறுத்தவரைக்கும் இந்த மாவட்டம் பிரிப்பதற்கு முன்பாக மாங்கனி மாவட்டம் என அழைக்கப்பட்டு வந்தது. இங்கு பல தொழில் செய்பவர்கள் உள்ளனர். காவல்துறை சொன்ன அனைத்து விஷயங்களையும் செய்யப்பட்டுள்ளது. கழகத்தின் நிர்வாகிகள் குறுகில காலத்தில் இவற்றை செய்துள்ளனர். இந்த பொது கூட்டத்துக்கு வருகை தரும் மக்கள் குழந்தைகளை அழைத்து வரக்கூடாது. அதே போன்று வயது முதிர்ந்தவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள் இந்நிகழ்ச்சிக்கு வர வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Total Page Visits: 98 - Today Page Visits: 3

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!