உண்மையின் உறைவிடம்…

Cuddalore farmer protest | கரும்பு விவசாயிகள்

கடலூர் மண்டல இணை பதிவாளர் அலுவலகம் முன்பு கரும்பு விவசாயிகள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகள் ஒன்றான பொங்கல் பண்டிகையையொட்டி கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி பண்ருட்டி, பத்திரக்கோட்டை, உள்ளிட்ட பல பகுதிகளில் கரும்பு விவசாயிகள் பன்னீர் கரும்புகளை விளைவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக முதல்வர் பொங்கல் தொகுப்புடன் கரும்பு வழங்கப்படும் என்று தெரிவித்த நிலையில் இடைத்தரகர்கள் இன்றி கரும்பை கொள்முதல் செய்ய சென்ற அதிகாரிகள் அரசு அறிவித்த தொகை 38 ரூபாயை விட குறைவாக 16-18 ரூபாய்க்கு வாங்குவதாகவும்அதற்கு விவசாயிகளிடம் ஆறடி உள்ள கரும்பை கூட 3 அடி தான் இருப்பதாக குற்றம் சாட்டி குறைந்த விலைக்கு எடுப்பதாகவும், அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அமைச்சர் விவசாயிகளை ஏமாற்றி ஊழல் செய்து வருவதாக குற்றம் சாட்டிய விவசாயிகள் கடலூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு மேல் சட்டை இன்றி கையில் கரும்புடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்தாண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த விவசாயிகளின் கரும்பை கொள்முதல் செய்ய வரும் அதிகாரிகள் காழ்ப்புணர்ச்சியோடு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் விவசாயிகள் வேதனையோடு தெரிவித்தனர்.

Total Page Visits: 116 - Today Page Visits: 2

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!