உண்மையின் உறைவிடம்…

Tiruvallur bus stand | பிரம்மாண்ட விழா

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி பேருந்து நிலையத்தில் வசந்தம் கூட்டமைப்பு சார்பாக பிரம்மாண்டமாய் விழா நடைபெற்றது

இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக திரு. ஸ்டீபன் IRCDS இயக்குனர் திரு. பழனி .பூண்டி பஞ்சாயத்து உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர். உடற்கல்வி ஆசிரியர். முன்னாள் பூண்டி பஞ்சாயத்து தலைவர். காவல்துறை அதிகாரிகள். சட்டப் பணிகள் ஆனைக் குழுவில் இருந்து வழக்கறிஞர்கள். பூண்டி ஒன்றிய நிர்வாகிகள். மாவட்ட நிர்வாகிகள். திருவள்ளூர் ஒன்றிய நிர்வாகிகள். கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகிகள். கலந்து கொண்டனர்

இந்த விழாவில் வசந்தம் பணியாளர்கள். 300 மேற்பட்ட மாற்று திறனாளிகள் கலந்து கொண்டார்கள் இவ்விழாவில் சுமார் 100000 லட்சம் ரூபாய் மதிப்புள்ள. 30 நபர்களுக்கு காதலிக்கருவி. ஒன்று கோல். அக்குள் கட்டை. வாக்கர். ஆகிய உபகரணங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டது தொடர்ந்து பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை. பூண்டி ஒன்றியம் கூட்டமைப்பு சார்பாக வழங்கப்பட்டது

அத்துடன் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மற்றும் ரெயின் கோட் 12 நபர்களுக்கு வழங்கப்பட்டது இதில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் இசை பாடல்கள் நிகழ்த்தப்பட்டு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சியை திரு. சூசைராஜ் அவர்கள் தொகுத்து வழங்கினார் இந்த நல திட்ட விழாவில் மாவட்டத் தலைவர் திரு.லிவின்ஸ்டன் மாவட்ட செயலாளர் திருமதி. ஆனந்தி மாவட்ட பொருளாளர் திரு. ஜெயச்சந்திரன்

பூண்டி ஒன்றிய தலைவர் திரு. ஜெயச்சந்திரன் ஒன்றிய செயலாளர் திரு. முருகன் ஒன்றிய பொருளாளர் திருமதி சுகுணா ஆகியோர் கலந்து கொண்டனர்

Total Page Visits: 68 - Today Page Visits: 1

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!