Bahubali rocket carrying | பாகுபலி ராக்கெட்
அமெரிக்காவின் செயற்கைக்கோளை சுமந்தபடி பாகுபலி ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO), தனது வலிமையான LVM3-M6 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் அடுத்த தலைமுறை தகவல் தொடர்பு செயற்கைக்கோளான புளூபேர்ட் பிளாக்-2 (BlueBird Block-2) விண்கலத்தை இன்று (புதன்கிழமை) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து, புதன்கிழமை காலை 8:55 மணி அளவில் ராக்கெட் ஏவப்பட்டது.
ராக்கெட் புறப்பட்ட 15 நிமிடங்களில், புளூபேர்ட் பிளாக்-2 செயற்கைக்கோள் ராக்கெட்டிலிருந்து பிரிந்து, திட்டமிட்டபடி பூமியில் இருந்து சுமார் 520 கி.மீ உயரத்தில் உள்ள சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது
Total Page Visits: 127 - Today Page Visits: 1
