padayappa re release | தெறிக்கவிட்ட படையப்பா
நடிகர் ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாளையொட்டி, ‘படையப்பா’ திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
ரசிகர்கள் கொண்டாடிய அல்லது கொண்டாட மறந்த படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அதில் சில படங்கள் ரீ-ரிலீஸிலும் ஆதிக்கத்தை செலுத்தின. குறிப்பாக புதிய படங்களுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு ரீ-ரிலீஸ் படங்களில் கொண்டாட்டங்களும் அமைந்துள்ளன. அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான ‘படையப்பா’ திரைப்படம் சாதனை படைத்துள்ளது. ரசிகர்கள் தியேட்டர்களை நோக்கி குவிந்த வண்ணம் உள்ளனர்
முன்பதிவில் மட்டும் 85 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
Total Page Visits: 144 - Today Page Visits: 2
