உண்மையின் உறைவிடம்…

TVK Vijay Speech | இது ஒரு போர்

அறிவாலயம் பக்கம் யார் சென்றாலும், கூட்டணியில் சேர்த்துகொள்கிறார் ஸ்டாலின் என தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை. சட்டம்-ஒழுங்கு காணாமல் போய் ரொம்ப நாளாகிவிட்டது. நாமும் கேள்வியாக கேட்கிறோம். ஆனால், பதில் வருவதே இல்லை. நிறைய மலைகிராமங்களில் பஸ் வசதியும் மருத்துவமனை வசதியும் இல்லை. தமிழ்நாட்டுல பெண்கள் பாதுகாப்பு கொட்டி கிடக்குதாம். கேட்குறவன்லாம் என்ன கேசரி சாப்பிட்டுட்டு இருக்கானா? பெண்கள், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு முதன்மையாக இருக்கும். பெண்கள், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு முதன்மையாக இருக்கும். சட்டம் ஒழுங்கு கண்டிப்பாக பின்பற்றப்படும். போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு உருவாக்கப்படும். அரசுப் பள்ளிகளும் கல்லூரிகளும் முதல்தரமாக இருக்கும். போட்டித் தேர்வுகளுக்கு ஏற்றப்படி பாடத்திட்டங்கள் மாற்றப்படும். இந்திய முழுவதும் உள்ள ஒன்றிய அரசின் கல்லூரிகளில் சேர்வதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மாவட்ட கலெக்டர், எஸ்.பிக்களில் பாதிக்கு பாதி பெண்களாக இருப்பார்கள். ஆட்டோ, டாக்சி, லாரி டிரைவர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும். இந்த தீய சக்திக்கு எண்டு கார்டு போட வேண்டும் என்றால், அவர்களை சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும். அதற்கு பட்டனை அழுத்த வேண்டும். தேர்தலில் விசில் சின்னம் அருகே உள்ள பட்டனை அழுத்த வேண்டும். அவ்வளவுதான்.அறிவாலயம் பக்கம் யார் சென்றாலும், கூட்டணியில் சேர்த்துகொள்கிறார் ஸ்டாலின். அந்த கூட்டணிக்கு கல்லாபெட்டி கூட்டணி என பெயர் வைத்திருக்கிறேன். அரத பழத கூட்டணியையோ, கொள்ளையடித்த பணத்தையோ வைத்து வெற்றிபெற முடியாது. இது விசில் புரட்சி தேர்தல். நம்பிக்கையாக இருங்கள். வெற்றி நிச்சயம் என பேசினார்.

Total Page Visits: 139 - Today Page Visits: 2

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!