உண்மையின் உறைவிடம்…

ADMK Election manifest | அதிமுக முக்கிய அறிவிப்பு

அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதற்கு முன்னதாகவே 5 வாக்குறுதிகளை அளித்திருந்தார் இந்நிலையில் மீண்டும் 5 வாக்குறுதிகளை வழங்கி உள்ளார்.

இதில்

அதிமுக ஆட்சிக்கு வந்தால், முதியோருக்கு உதவித்தொகை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.

விதவைப் பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 1200 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாக உயர்த்தப்படும்.

கல்வி கடனை ரத்து செய்வோம்

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும்.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுவில் வீரர்ங்கள் உயிரிழந்தால்10 லட்சம் வழங்கப்படும்.

படுகாயம் அடைந்தால் 2 லட்சம் வழங்கப்படும்.

ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு அரசு சார்பில் 5 லட்சம் மானியம் வழங்கப்படும்.

ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு தற்போது கடைபிடித்து வரும் ஆன்லைன் முறையை ரத்து செய்வோம்.

இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள் மற்றும் ஏனைய சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்தவர்கள் தொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அதிமுகவின் இரண்டாம் கட்ட வாக்குறுதிகளை அறிவித்து உள்ளார்.

இதுவரை வழங்கப்பட்டிருக்கின்ற பத்து வாக்குறுதிகளும் மக்களினுடைய அன்றாட தேவைகளுக்கு மிக முக்கிய பங்கு வகித்திருந்தாலும் அனைத்தும் பணம் சார்ந்து, மக்களை கவரும் வண்ணம் இருக்கிறதோ என்று பல கேள்விகள் எழும்புகிறது.

Total Page Visits: 113 - Today Page Visits: 1

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!