Jammu kashmir accident | ராணுவ வாகன விபத்து
ஜம்மு – காஷ்மீர் பள்ளத்தாக்கில் ராணுவ வாகனத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 வீரர்கள் வியாழக்கிழமை பலியாகியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டம், தனலாவில் உள்ள படேர்வா – சாம்பா சாலையில் சென்று கொண்டிருந்த ராணுவ வாகனம் திடீரென பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 21 ராணுவ வீரர்கள் பயணித்த நிலையில், 10 வீரர்கள் படுகாயமடைந்து உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த வீரர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து படேர்வா மாவட்ட மருத்துவ அதிகாரி ஈடிவி பாரத் ஊடகத்திடம் விவரிக்கையில், ” விபத்துக்குள்ளான வாகனத்தில் 21 வீரர்கள் பயணித்துள்ளனர். அவர்களில் 10 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 10 ராணுவ வீரர்கள் உயர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லேசான காயத்துடன் ஒரு ராணுவ வீரர் படேர்வா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.” என்றார்.
