railway hikes fare | ரயில் டிக்கெட் உயர்வு
நாடு முழுவதும் ரயில் டிக்கெட் கட்டணம் டிசம்பர் 26 முதல் உயர்த்தப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது.
215 கி.மீ தூரத்திற்கு மேல் பயணிப்பவர்களுக்கு மட்டுமே கட்டணம் உயர்த்தப்படுகிறது. 215 கி.மீ-க்கும் குறைவான தூரம் பயணிப்போருக்குக் கட்டண உயர்வு இல்லை. மின்சார ரயில்கள் (Suburban trains) மற்றும் புறநகர் ரயில் பயணங்களுக்குக் கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சாதாரண வகுப்புகள்: 215 கி.மீ-க்கு மேல் பயணிக்கும் சாதாரண வகுப்புகளில் கி.மீ-க்கு ஒரு பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது.
500 கி.மீ வரை: 500 கி.மீ வரையிலான பயணங்களுக்குச் சராசரியாக 10 ரூபாய் வரை கட்டணம் உயரும்.
மெயில் மற்றும் விரைவு ரயில்கள்: எக்ஸ்பிரஸ் மற்றும் மெயில் ரயில்களில் கி.மீ-க்கு 2 பைசா உயர்த்தப்படுகிறது.
இந்த உயர்வு மூலம் ரயில்வே துறைக்கு ஆண்டுக்கு சுமார் 600 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
